fbpx
Others

பள்ளிக்கரணை போக்குவரத்துபுலனாய்வு–பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்..

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் விபத்து குறித்து விசாரணைக்காக வரும் பொதுமக்களிடம் பணம் அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்தது.அத்துடன் விபத்து இழப்பீடு வழக்குகளை தனக்கு தெரிந்த வக்கீல்கள் மூலமாக இழப்பீடு தொகைகளில் கமிஷன் பெற்றதாகவும் புகார்கள் காவல் துறை உயர் அதிகாரிளுக்கு வந்தது.தொடர் புகார்களை அடுத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரைணக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜேம்ஸ் தங்கையா விசாரணை நடத்தினார். அதில் பெண் இன்ஸ்பெக்டர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மை என்பவது தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் இன்ஸ்பெக்டர் ராணியை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். இந்த நிலையில் தாம்பரம் ஆணையரக கூடுதல் கமிஷனர் காமினி கடந்த 7 மாதங்களாக நடத்திய விசாரணையில் இன்ஸ்பெக்டர் ராணி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் ராணியை பணி நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

 

 

Related Articles

Back to top button
Close
Close