fbpx
Others

பள்ளம் இல்லாத சாலையா …விரைவில் வருகிறது சட்டம்..?

பள்ளம் இல்லாத சாலை என்பது இந்தியாவில் கனவு போல் இருக்கிறது. புதிதாக சாலை அமைத்த ஒரு மாதத்தில் கூட, மழை காரணமாக சாலைகளில் பள்ளம் அல்லது குழிகள் ஏற்படும். தேசிய நெடுஞ்சாலைகள் ஒருபுறம் எனில், நகர்புற மற்றும் மாநில சாலைகளில் மெகா சைஸ் பள்ளங்கள் சர்வசாதாரணமாக ஏற்படும். இதன் காரணமாக சாலைகளில் செல்வோர் விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. விபத்துகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் பள்ளம் இல்லாத சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.இந்த சூழலில் பள்ளம் இல்லாத சாலைகளை உருவாக்க விரும்பும் மத்திய அரசு, அதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை உருவாக்கி வருகிறது. டெல்லியில் வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், மழைக் காலங்களில் சாலைகளில் சேதங்கள் ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகின்றன. இதற்கு தீர்வு காண விரும்பும் மத்திய அரசு, டிசம்பா் மாத இறுதிக்குள் பள்ளங்கள் இல்லாத தேசிய நெடுஞ்சாலைகளை உறுதி செய்யும் வகையில் கொள்கை ஒன்று உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தில் இளம் பொறியாளா்களை இணைத்து வெற்றி பெற விரும்புகிறோம் என்றார். வெள்ளத்தில் மிதந்த சேலையூர் சாலை.. ஆன்ஸ்பாட்டுக்கு வந்த தாம்பரம் மேயர் வசந்தகுமாரி.. விறுவிறு மத்திய அரசின் திட்டப்படி, தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரு அதிகாரியும், அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி என்றால் குறைந்தது, 15 நாட்களுக்கு ஒரு முறையாவது நேரில் சென்று சாலைகளின் தரம் எப்படி உள்ளது என்பது பற்றிய ஆய்வு பணிகளை மேற்கொண்டாக வேண்டும். அப்படி பார்க்கும் போது சாலைகளில் பள்ளம் ஏற்பட்டிருந்தால், அல்லது சாலை மோசமடைந்திருந்தால் உடனேஅதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கண்காணிப்பு நடைமுறை, நாடு முழுவதும் உள்ள 1.46 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெஞசாலைகளிலும் நடைமுறைக்குகொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாலைகளில் குழிகளை கண்டுபிடிப்பது, பராமரிப்பில் உள்ள குறைபாடுகளை கண்காணிப்பது, தேவையான இடங்களில் வடிகால்கள் அமைத்து சாலையை பாதுகாப்பது போன்றே பணிகளை செய்ய கண்காணிப்பு பொறியாளர்களுடன் இளம் பொறியியல் பட்டதாரிகளையும் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டிருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டுகணக்குப்படி,நாடுமுழுவதும்உள்ளதேசியநெடுஞ்சாலைகளில்  உள்ள பள்ளங்கள் காரணமாக 3625 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 1481 பேர்உயிரிழந்துள்ளனர்.பலர்காயம்அடைந்துள்ளனர்  இந்த சூழலில் தான் பள்ளம் இல்லாத நெடுஞ்சாலை என்ற இலக்கை அடைய மத்திய அரசு புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது. நெடுஞ்சாலை கண்காணிப்பு தவிர இன்னொரு திட்டமும் அரசிடம் உள்ளது. அதனையும் இப்போது பார்ப்போம்.. இனிமேல் வரப்போகும் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டங்களுக்கு, பில்ட்-ஆபரேட்-ட்ரான்ஸ்ஃபர் (பிஓடி) முறையில் மத்திய அரசு ஒப்பந்தங்களை வழங்க போகிறJ. பில்ட்-ஆபரேட்-ட்ரான்ஸ்ஃபர் முறையில் ஒப்பந்தம் செய்தால். நெடுஞ்சாலைகளை மிகவும் நல்ல முறையில் கண்டிப்பாக ஒப்பந்ததாரர்கள் பராமரித்தாக வேண்டும். அதனால் தான் இந்த முறைக்கு மத்திய அமைச்சர் கட்காரி பரிந்துரை செய்துள்ளார். பொதுவாக இந்தியாவில் BOT, EPC, HAM ஆகிய மூன்று முறைகளில் சாலை கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.இதில் EPC முறையில் கட்டப்படும் சாலைகளுக்கு சீக்கிரம் பராமரிப்பு தேவைப்படும். அதேசமயம் BOT முறையில், அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு பராமரிப்புச் செலவை ஒப்பந்ததாரர் தான் ஏற்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக சாலை தரமாக இருக்கும் . அந்த அடிப்படையில் தான் இனி வரும் சாலைகளை BOT முறையில் தான் அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. BOT திட்டத்தை பொறுத்தவரை தனியார் முதலீட்டாளர்கள் 20-30 ஆண்டுகள் வரை நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதியளிப்பது, கட்டுமானம் மற்றும் சாலையை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அந்த சாலைகளை உருவாக்கி பராமரிப்பதற்காக டோல்கேட்களை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் EPC திட்டங்களை பொறுத்தவரை, நெடுஞ்சாலையை பராமரிக்கவும், அமைக்கவும் ஒப்பந்ததார்களுக்கு அரசு தான் பணம் செலுத்தும். அந்த வகையில் அங்கு சுங்கசவாடி அமைத்தால் அந்த கட்டணம் அரசுக்குத்தான் சேரும். இந்த நடைமுறை மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close