fbpx
Others

பத்திரிகையாளரை பிச்சை எடுக்கச் சொல்லும் அதிகாரி–அரசின் அவல நிலை

பத்திரிகையாளரை பிச்சை எடுக்கச் சொல்லும் அதிகாரி- விடியா திமுக அரசின் அவல நிலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னாள் அமைச்சர் ஓ. எஸ்.மணியன் வீட்டிற்கு அருகில் உள்ள தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. அங்கு பல்வேறு முறைகேடுகள் அராஜகங்கள் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் பெயரில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது விவசாயி செங்குட்டுவன் என்பவர் நெல்மணி மூட்டைகளை தொடர்ந்து நான்கு நாட்களாக நேரடி கொள்முதல் நிலையத்தில் வைத்துக் கொண்டு தன்னுடைய நெல்லை கொள்முதல் செய்யுமாறு எவ்வளவு கெஞ்சி கேட்கிறேன் யாருமே கண்டு கொள்ளவில்லை என்று புலம்பினார். அதிகாரிகளும் ஊழியர்களும் வேண்டுமென்று காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்று கண் கலங்கினார். அதன்பிறகு நமது புலனாய்விற்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு விவசாயிகள் குறை கூறினார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி எஸ் ஆர் எம் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம் அவர்கள் தாமதப்படுத்தி விட்டார்கள் அந்த புகாரினை விசாரிக்க சென்ற இரண்டு பத்திரிக்கையாளர்களை கொள்முதல் அலுவலர் தம்பிதுரை என்பவர் பத்திரிக்கைக்காரன் எல்லோருமே பிச்சை எடுத்து தான் பிழைக்கிறான் என்றும் அதற்கு பதிலாக வேற வேலை செய்து விடலாம் என்றும் கெட்ட வார்த்தைகளில் பேசிய பேசியதோடு மட்டுமல்லாமல் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்து தள்ளிவிட்டார்கள். அப்போது பத்திரிகைக்காரர்கள் அனைவரும் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்
தரக்குறைவான வார்த்தைகள் பேசியதோடு சுமை தூக்கும் பணியாளர் முருகானந்தம் என்பவர் விவசாயி பிரச்சனையில் தலையிட நீ யாருடா என்று கேட்டது மட்டுமல்லாமல் இன்னும் பல தகாத வார்த்தைகளையும் பேசி உள்ளார். முருகானந்தம் என்பவர் பற்றி விசாரித்ததில் ஏற்கனவே சாராயம் விற்றுக்கொண்டு இருக்கிறார் என பகுதி மக்கள் கூறுகிறார்கள் பிரபல சாராய வியாபாரி என தெரியவந்துள்ளது. முருகானந்தன் என்பவரை பணிநீக்கம் செய்தும். கெட்ட வார்த்தைகளில் மன உளைச்சல் ஆளாகும்படி பேசிய கொள்முதல் அலுவலர் தம்பிதுரை மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Related Articles

Back to top button
Close
Close