fbpx
Others

பட்டைக்கு பதில், நாமம் பூசப்படும் வித்தியாசமான ஒரே சிவன் கோயில் இதுதான்…

 நமது நாடு பல பழங்கால புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் தாயகமாக உள்ளது. அவற்றின் பதிவுகள் புராணங்களிலும் பண்டைய நூல்களிலும் காணப்படுகின்றன. இந்த பண்டைய புனைவுகள் நமது வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு சாட்சியமாக உள்ளன. அந்த வகையில் தற்போது நாட்டில் ஒரு தனித்துவமான சிவன் கோயில் பற்றி தற்போது பார்க்கலாம். பீகார் மாநிலம் ஜமுய் நகரில் உள்ள சிவன் கோவில். இந்த கோயில் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது,ஏனெனில்இங்குள்ளசிவலிங்கம்நாட்டிலுள்ளமற்றஅனைத்துசிவலிங்கங்களிலிருந்தும் வித்தியாசமாக வழிபடப்படுகிறது.  பொதுவாக சைவக் கடவுளான சிவ பெருமானுக்கும், சிவ லிங்கத்திற்கும், பட்டை பூசப்படுவதையே நாம் பார்த்திருப்போம். ஆனால் ஜமுய் சிவன் கோயிலில் மட்டும் சிவலிங்கத்திற்கு வைவணத்தை குறிக்கும் நாமம் போடப்பட்டு வழிபடப்படுகிறது. அந்த கோயில் அர்ச்சகர் பங்கஜ் பாண்டே கூறுகையில், நாட்டில் உள்ள நாமம் போட்டு வழிபடப்படும் ஒரே சிவலிங்கம் இதுதான். இந்த வித்தியாசமான வழிபாட்டிற்கு ராமாயணத்திற்கு முந்தைய புராணக் கதையும் காரணமாக உள்ளது. சிவன் வழிபாட்டில் குங்குமம்  கொடுக்கப்படுவதில்லை ஏன்? ஒளிந்திருக்கும் ரகசியம் இதோ..!!    புராணங்களின் படி, இந்த கோயில் அமைந்துள்ள இடம், பக்ஷிராஜனான ஜடாயுவின் மரணம் நடந்த இடம். தான் இறக்கும் போது, ஜடாயு தனது பெயரை அழியாத வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ராமரிடம் வரம் கோரினார். பகவான் ராமர் ஜடாயுவின் சாம்பலில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி அதன் மீது  “வைணவ திலகமான நாமத்தை பூசினார். அப்போதிருந்து, இந்த சிவலிங்கம் நாமம் போடப்பட்டு காலங்காலமாக வழிபடப்படுகிறது. ஒவ்வொரு மஹா சிவராத்திரியிலும் இங்கு பிரமாண்டமான திருவிழா நடத்தப்படுவதுடன், சிவபெருமானின் பிரமாண்ட ஊர்வலமும் நடைபெறுகிறது.  இந்த கோவில் வளாகத்தின் நடுவில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றுக்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. இங்குள்ள கிணறு லட்சுமணனின் அம்பினால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ராமர் இங்கு சிவலிங்கத்தை நிறுவியபோது, அபிஷேகத்திற்கு இங்கு தண்ணீர் இல்லையாம் அப்போது லக்ஷ்மணன் தரையில் அம்பு எய்து அங்கே ஒரு கிணற்றை உருவாக்கினாராம். இந்த பிரபலமான கோயிலுக்கு பீகார் தவிர, ஜார்கண்ட் உட்பட பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானை வணங்குவதற்காக கோவிலுக்கு வருகிறார்கள்.”  ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஞாயிற்றுக்கிழமை அன்று(06/08/2023) சிவனுக்கு பால்குடம் ஏந்தி பாதயாத்திரை போகும்பொழுது Sameer Kumar மற்றும் எஸ் எஸ் மல்டிநேஷனல் குரூப் ஆஃப் கம்பெனி டைரக்டர் டாக்டர் சரத்ராஜ் முன்னிலையில் பக்தர்களுக்கு பால் பழம் ஆகியவற்றை வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது…

Related Articles

Back to top button
Close
Close