fbpx
Others

 நோய் வாய்ப்பட்ட மகன்களை காப்பாற்ற போராடும் தாய் சிகிச்சைக்கு உதவ எதிர்பார்ப்பு…

இடுக்கி மாவட்டம் டிச 03 மூணார் அருகே நோய் வாய்ப்பட்ட மகன்களை காப்பாற்ற போராடும் தாய் அமுதா தையல் இயந்திரத்தின் இயந்திரமாக உழைத்துபோராடும் பாசத்தாய்மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான பெரியவாரை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் அமுதா வயது 51 மகன்கள் சுபாஷ் வயது 31 அபினேஷ் 29 மருமகளுடன் வசித்து வருகிறார்
மூத்த மகன் சுபாஷ் மூளையில் கட்டி ஏற்பட்டு 2017ல் பாதிக்கப்பட்டார் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கம்பெனியில் பணியாற்றி வந்த கணவர் ஆரோக்கியசாமி சிறுநீரக பாதிப்பால் 2021செப் 23 ல் இறந்தார் அதன் பிறகு குடும்ப சுமையை முழுமையாக ஏற்ற அமுதாக்கு இளைய மகன் அபினேஷுக்கு சிறுநீரகங்கள் சுவாச குழாய் கண்கள் ஆகிவற்றை பாதிக்கும் ஒரு வித கொடிய நோயால்பாதித்ததுபேரிடியாகஅமைந்ததுஇரண்டுமகன்களும்நோய்வாய்ப்பட்டதால் நிலைகுலைந்த அமுதாவுக்கு சிகிச்சை செய்ய பணம் தயார் செய்வதற்கு பெரும் சவாலாக அமைந்தது தனக்குத் தெரிந்த தையல் தொழிலில் இரவும் பகலும் பார்க்காமல் இயந்திரமாக உழைத்தும் தேவைக்கு ஏற்ப வருவாய் கிடைக்கவில்லை இரண்டு மகன்களின் சிகிச்சை செய்ய செலவுக்கு மாதந்தோறும் ரூ 30.000 வரை செலவாகிறது நல்லுள்ளம் படைத்த சிலர் சிகிச்சைக்கு அவ்வப்போது உதவியும்போதிய பணமின்றி பல மாதங்கள் சிகிச்சை முடங்கியது கடந்த அக்டோபரில் சுபாஷுக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்தது தற்போது கிமோதெரபி சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார் அதேபோல் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அபினேஷுக்கு சிகிச்சை நடந்து வருகிறது இருவரையும் கவனிக்க வேண்டியிருப்பதால் அவர்களின் மனைவிகள் பணிக்கு செல்ல இயலவில்லை இந்த நிலையில் மகன்களை காப்பாற்ற போராடும் பாசத்தாய் அமுதாவுக்கு சிகிச்சை செலவுக்கு உதவிக்கரம் ஏந்தி காத்திருப்பதாக தெரிவித்தார் கருணை உள்ளம் கொண்டு உதவும் முன் வரும் நல் உள்ளங்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண் 9495814231 தொடர்பு கொண்டு உதவலாம்… அபினேஷ் அலைபேசி எண் 9495273857     KamacheTheni:

Related Articles

Back to top button
Close
Close