fbpx
Others

நெமிலி ஊராட்சி ஒன்றியம் – சிறப்பு செய்தி

சம்பத்துராயன்பேட்டை (ம) நாகவேடு, அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியருக்கு!…தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா,சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் 42 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், திருமதி. குமாரி குட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது!…நாகவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் 27 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியின் தலைமை ஆசிரியர், திரு. இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!.இந்நிகழ்ச்சிகளில், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவியருக்கு வழங்கினார்!…மேலும் பள்ளிகளில் செய்யப்படவேண்டிய, கழிப்பறை வசதி, கூடுதல் பள்ளி கட்டிடம், பழைய பள்ளிக் கட்டிடங்களை பழுது நீக்கி வண்ணம் பூசுதல் (Painting works), நூலக கட்டிடம், CCTV கேமரா பொறுத்துதல், விளையாட்டு மைதானம் மேம்பாடு செய்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒன்றிய பெருந்தலைவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் கோரிக்கைவைத்தனர்!.. இக்கோரிக்கைகளை, மாண்புமிகு.அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியப் பெருந்தலைவர் உறுதி அளித்தார்!…இந்நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர், திரு.ச.தீனதயாளன், சிறுணமல்லி ஊராட்சி மன்ற தலைவர், திருமதி. ஜோதி அருணாச்சலம், நாகவேடு ஊராட்சி மன்ற தலைவர், திருமதி.ஆனந்தி பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், முருகேசன், சங்கரி செல்லப்பன், பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள், சிறுணமல்லி ஊராட்சி துணைத் தலைவர், கங்கா பிராங்க்ளின் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆறுமுகம், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், சித்ரா, விஜி, நிர்வாகிகள் – சுப்பிரமணி, வடிவேல், தங்கராஜ், கீழாந்துரை-கலைஞர்தாசன், மாணிக்கவேல், பாண்டியன், கைலாசம், சக்திவேல், கோபிநாத், பிரதீப், ரமேஷ், ராஜேந்திரன், வடிவேல், பாபு மற்றும் கிராம பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!.

Related Articles

Back to top button
Close
Close