fbpx
Others

நூல் விலை உயர்வுக்குமத்திய அரசுகாரணம் கே.எஸ்.அழகிரி

நூல் விலை உயர்வுக்கு பஞ்சு ஏற்றுமதி கொள்கையே காரணம்- மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
 தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜவுளித் தொழிலின் முக்கிய மூலப்பொருளான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியின் காரணமாக உள்நாட்டில் பருத்தி தட்டுப்பாடு ஏற்பட்டு வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் தவறான பஞ்சு ஏற்றுமதி கொள்கையின் காரணமாகவும், ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளின் பதுக்கல் காரணமாகவும் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி லாபம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே மோடி அரசின் அவசர, அலங்கோல ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலம் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில், பருத்தி நூல் விலை உயர்வால் தொழில்துறை அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்திலும் தமிழகம் தானே என்று மோடி அரசு அலட்சியப் போக்கை கடைபிடித்தால், அதற்கான விலையை நிச்சயம் தர வேண்டியிருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Related Articles

Back to top button
Close
Close