fbpx
RETamil News

கொரோனா தொற்றால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸின் பரவல் தமிழகத்தில் பெருமளவில் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி , தமிழகத்தில் கொரோனாவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 411-ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் முதல்முறையாக மதுரையை சேர்ந்த ஒருவர் கொரோனா பதிப்பில் பலியானார். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தெரிவித்திருந்த நிலையில் அந்த நபர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த மாநாட்டிர்க்கு சென்று வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 53 வயது பெண் தலைமை ஆசிரியருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கண்காணிப்பில் வைத்திருந்தநிலையில் இன்று பலியாகியுள்ளார்.

அவரை சேர்ந்த குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த பலியை அடுத்து தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close