fbpx
Others

நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்—செய்தி

நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் பதிவு எண் 10/1995 நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்
நாளது தேதி 18/03/2023 சனிக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தலைவர் திரு P.G.R. ராஜாராமன்  தலைமையில் நடைபெற்றது செயலாளர் திரு G.வெங்கடேசன்  வரவேற்புரையாற்றினார் பொருளாளர் திரு K.ரமேஷ், துணைத் தலைவர் திரு. தீன் S. சாகுல் ஹமீது  முன்னிலை வகித்தார் துணைச் செயலாளர் திரு வேணு.அண்ணாத்துரை  நன்றி கூறினார்.கௌரவ தலைவர் K.ராஜப்பா, சிவ.சங்கர், வெடி கடை G.சேகர், இராம.அன்பரசு, S.முஜிபுர் ரகுமான், M.சிவசேது, சிந்து.சுப்பிரமணி,சிவசக்தி டயர் P.சங்கர்,
கிருஷ்ண.சங்கர்,A. ஜேம்ஸ், B.குமார்,க. சண்முகம், P. சதீஷ்குமார், S. கதிர்வேல், D. கோபிநாதன், T. ரவி டெய்லர், வை. கரிகாலன், R. ஜெயபால், S. சாகுல் ஹமீது, A. சர்புதீன்
செய்தி தொடர்பாளர் M.ராஜேந்திரன் மற்றும் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், இணைச் செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1. நவம்பர் 2022 to பிப்ரவரி 2023 வரையிலான வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது 2. நமது மாவட்டத்தலைவர் திரு V.K.K.ராமமூர்த்தி பிறந்தநாளில் நமது சங்க உறுப்பினர் K.தனலட்சுமி (கணேஷ் எலக்ட்ரிகல்ஸ்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தையல் இயந்திரத்தை நமது நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. 3. மே 5 ஈரோட்டில் நடைபெற உள்ள வணிகர் உரிமை முழக்க 40 வது மாநாடு சிறக்க நம் வர்த்தகர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது .4. நீடாமங்கலம் பகுதி வியாபாரிக்கும் பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் நீடாமங்கலம் வழியாக செல்லும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட பொறியாளரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுப்பது..5. நீடாமங்கலம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பெரும்பாலான வாகனங்கள் பழையநீடாமங்கலம் சாலையில் செல்வதால் அந்த சாலை மிகவும் சேதம் அடைந்து அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி நடைபெறுகின்றது. அதை சீரமைக்கும் வகையில் அந்த சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலையும் விபத்துகளையும் தடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருக்கும் கோரிக்கை மனு கொடுப்பது .6. நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட அரசுக்கு நமது வர்த்தகர் சங்கம் மூலமாக வேண்டுகோள் விடுப்பது….

( அரசு செய்திக்காக நீடாமங்கலம் எஸ் சுரேஷ் )

Related Articles

Back to top button
Close
Close