நீடாமங்கலம்–பள்ளி திறக்கும்நாளில்பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா…

நீடாமங்கலம் ஜுன்11
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் பசுமை பள்ளிகள் மற்றும் பசுமை வீதிகள் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் கரங்களால் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 19 சோத்திரியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.தீனதயான் தலைமையிலும், உதவி ஆசிரியர் திருமதிகு.பாலா, பள்ளி மேலாண்மை குழு தலைவி வனிதா
பெற்றோர் ஜெயக்குமார் முன்னிலையில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களை கொண்டு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்வில் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் ஜெகதீஷ் பாபு அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் கருணாநிதி, ரவிச்சந்திரன், அசோக்குமார் ஆகியோர் மரங்களின் அவசியத்தை பற்றி மாணவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். முடிவில்பல்நோக்கு சேவை இயக்க பொறுப்பாளர் ஆசிரியர் கணேசன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக
நீடாமங்கலம் நகரத்தில் ராம விலாச தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் தலைமையிலும் தலைமை ஆசிரியர் கீதா உதவி ஆசிரியர் மாலதி ஆகியோர் முன்னிலையில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் உறுதி மொழியினை ஏற்றனர். ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி உரையாற்றினார்…