fbpx
Others

நீடாமங்கலம்–சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆய்வு அறிக்கை தாக்கல்

நீடாமங்கலம் பல் நோக்கு சேவை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக 4 நாள் பயிற்சி நடைபெற்றது, இதில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை கண்டுணர் பயணம் போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து இறுதியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆய்வறிக்கை தாக்கல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் கெளரவத் தலைவர் S. சந்தான ராமன் தலைமையேற்றார், பொருளாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் செல்வராஜ், கணேசன் ஆகியோர் முன்னிலையேற்றனர் தலைவர் பத்மஸ்ரீ ராமன் வரவேற்புரையாற்றினார். சுற்றுச்சூழல் தொடர்பான கருத்துகளையும் எல் நானோ விளைவுகள் பற்றியும் செயலர் ஜெகதீஸ் பாபு விளக்கினார். ஈச்சங்கோட்டைவேளாண்கல்லூரி, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள்ஆய்வு அறிக்கையினை தாக்கல் செய்தனர்.பூண்டி புஷ்பம் கல்லூரியின் விலங்கியல் துறை துணை பேராசிரியர் Dr.S விஜயகுமார் பார்வையிட்டு சான்றிதழ்களை வழங்கினார். 4 நாள் களப்பணியில் பல்வேறு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.உறுப்பினர் சுரேஸ் நன்றியுரையாற்றினார்

Related Articles

Back to top button
Close
Close