fbpx
Others

நீடாமங்கலம்–கலைஞர் நூற்றாண்டு விழா…,தீ தடுப்பு விழிப்புணர்வு…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் ஆர் ஆர் பெட்ரோல் பங்க் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு போலி ஒத்திகை பயிற்சி நீடாமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக செயல்முறை விளக்கமாக மாவட்ட அலுவலர் திரு வடிவேலு அவர்கள் அறிவுரையின்படி செய்து காண்பிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு ஆர் – ராம்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் இந்நிகழ்ச்சியில் வாகன விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது நீர்நிலைகள் இயற்கை இடர்பாடுகள் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் சிக்கித் தவித்தால் எப்படி மீட்பது தீயணைப்பு கருவிகள் மூலம் தீ விபத்து பெரிய அளவில் ஏற்படாமல் ஆரம்ப நிலையிலேயே எப்படி தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை எப்படி காப்பாற்றி முதலுதவி அளிப்பது முதலிய செயல்முறை விளக்கங்கள் அனைவருக்கும் செய்து காண்பிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை தீயணைப்பு நிலைய அலுவலர் அ- கார்த்திகேயன் மற்றும் சிறப்பு அலுவலர் நா- ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் நிலைய பணியாளர்கள் செய்து காண்பித்தனர் பின்னர் நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்- ராம்ராஜ் அவர்கள் நன்றி கூறும் பொழுது இந்த சிறந்த நிகழ்வை பார்த்த பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வாழ்வில் கடைபிடித்து தங்களையும் உயிரையும் காப்பாற்றி சமுதாயத்திற்கு பயன்பெறுமாறு உதவ வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close