fbpx
Others

நீடாமங்கலம்-உலக தண்ணீர் தினத்தில் விழிப்புணர்வு பேரணி…


நீடாமங்கலம்மார்ச்22உலகதண்ணீர்தினத்தன்றுநீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி இணைந்து பொதுமக்களுக்குதண்ணீர்முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் பேரணிமேற்கொண்டனர். பல்நோக்கு சேவை இயக்க தலைவர் பத்ம ஸ்ரீ ராமன் தலைமையிலும். கௌரவத் தலைவர் சந்தானராமன் துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்ற பேரணியில் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் விதத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உலகில் 97 சதவீதம் நீர் இருந்தாலும் உப்புநீராக உள்ளது எஞ்சிய மூன்று சதவீதம் நீரும் பனிக்கட்டிகளாகவும் நிலத்தடி நீராகவும் உள்ளது . மேற்பரப்பு நீர நிலைகள் விழிப்புணர்வு இன்றி பெரும்பாலும் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் பல நீர் நிலைகள் உள்ளது. அதேபோன்று முன்பு காலத்தில் குடிநீராக இருந்த குளங்கள் இன்று மாசடைந்து பாசிகள் படர்ந்து நீரில் நடைபெறும் உணவு சங்கிலிக்கு இடையூறாக உள்ளது . மாணவர்கள் நீர் பற்றிய விழிப்புணர்வை அறிந்து கொள்ள வேண்டும் நீரின்றி உயிரினங்கள் எதுவும் வாழாது என்பதை அறிந்து நீரின் அவசியத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு செய்தும் தெருக்களில் உள்ள குடிநீர் குழாய்களில் வீணாக ஓடும் நீரை நிறுத்த வேண்டும் என்றும். தேவைக்கு அதிகமாக நீரை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது . டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் நீர் சிக்கனம் பற்றிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து வழிநடத்தினர். பள்ளி மாணவர்களுக்கு நீர் மேலாண்மை எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி ஓவிய போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது முன்னதாக தலைமை ஆசிரியர் தேவலட்சுமி வரவேற்பு உரையாற்றினார் உறுப்பினர் நமச்சிவாயம் நன்றியுரை கூறினார்.

.

Related Articles

Back to top button
Close
Close