நீடாமங்கலம்–இதயம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
உலக இதய தினத்தை முன்னிட்டு அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இதயம் காப்போம் எனும் தலைப்பில் தலைமையாசிரியர் தேவி லெட்சுமி தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் நாள் உலக இதய தினமாக கொண்டாடப்படுகிறது இந்நாளில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல் தொடர்பாக விழிப்புணர்வு பெறுவது அவசியம். பிளாஸ்மா என்று அழைக்கப்படும் சுத்தமான மஞ்சள் திரவத்தில் உள்ள உயிரணுக்கள் மற்றும் இரத்த சிறு தட்டுகளின் கலவையே ரத்தம் ஆகும். இதயமானது இந்த ரத்தத்தை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக எடுத்து செல்கிறது . இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் உயிர் வாழ முடியும் . இதயத்தை வலுவாக்க சத்தான காய்கறிகள் பழங்கள் சிறுதானியங்கள் போன்றவற்றை நாம் அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் . வருத்த தின்பண்டங்கள், துரித உணவுகள், போன்றவற்றை தவிர்த்தும் , இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சியினை தினசரி செய்ய வேண்டும். மனக்கவலை, மன அழுத்தம் , புகை பிடித்தல் மது அருந்துவது போதைப் பொருள்களை பயன்படுத்துதல் இதயத்தை பலவீனமடைய செய்து, உள்ளுறுப்புகளை பாதித்து, நாம் இறக்க வழிவகுக்கும். மாணவர்கள் சிறு வயதிலேயே இதயம் மற்றும் உள்ளுறுப்புகளின் அவசியத்தை உணர்ந்து நோயற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று தெரிவித்தார் . நிகழ்வில் மாணவர்கள் இதயம் காப்போம் எனும் உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக ஆசிரியை சிங்கார கஸ்தூரிபாய் அனைவரையும் வரவேற்றார் ஆசிரியர் திராவிட மணி நன்றி உரையாற்றினார் .