நீடாமங்கலம்–அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா -சிறப்பு செய்தி
அரசு உதவிபெறும் பள்ளியின் 106 ஆம் ஆண்டு விழா நீடாமங்கலம் ஏப்ரல் 17.
நீடாமங்கலத்தில் அரசு உதவி பெறும் இலக்குமிலாச நடுநிலைப் பள்ளியின் 106ஆம் ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமையிலும், வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் வட்டார வள மேற்பார்வையாளர் சத்யா பள்ளி முகவர் பழனிவேலு முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் சிறப்பாக வளர்த்த மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் பல்நோக்கு சேவை இயக்க கௌரவ தலைவர் சந்தான ராமன் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நமச்சிவாயம் ராஜேந்திரன் செந்தில்குமார் ஜெகதீஷ் பாபு கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தலைமை ஆசிரியை கல்பனா ஆண்டறிக்கை வாசித்தார் . முன்னதாக தலைமையாசிரியை தேவிலட்சுமி வரவேற்புரை ஆற்றினார் பட்டதாரி ஆசிரியர் திராவிட மணி நன்றி உரை கூறினார் .