fbpx
Others

நித்தியானந்தா….இலங்கையில் தஞ்சம்….?

கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் என குறிப்பிடப்படும் நித்தியபிரேமாத்மா ஆனந்த சுவாமி, அதிபர் ரணிலிக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார், அதில் நித்தியானந்தாவிற்கு என்ன பிரச்னை என்பதை கைலாசாவில் உள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அதற்கான மருத்துவ வசதிகள் கைலாசாவில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.நித்தியானந்தா உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அரசியல் மற்றும் மருத்துவ புகலிடம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சில சக்திகளால் நித்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் அவரின் பாதுகாப்பை உறுதி செய்ய கைலாசாவில் இருந்து வெளியேறுவதே சிறந்ததாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் நித்தியின் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான முழு செலவையும் கைலாசா அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் இலங்கை உடனான ராஜாங்கரீதியான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு நன்றிக்கடனாக லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் நித்திக்கு அரசியல் புகலிடம் வழங்கிவிட்டால், இலங்கைக்கு தேவையான முதலீட்டையும் வழங்க முன்வருவதாக தெரிவிக்கப்பட்டது.இந்த கடிதம் பெறப்பட்டதாக உறுதி செய்த இலங்கை அரசு அதிகாரிகள் இது குறித்து இலங்கை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close