நாளை-பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா
பசும்பொன் முத்துராமலிங்க தேவரி
ன் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா( நாளை) 30/10/25 நடைபெற உள்ள நிலையில், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்துமரியாதைசெலுத்தஉள்ளனர்.இதற்காக மாநகர காவல் துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மதுரையில் நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு கஸ்டாலின்நாளைகாலை8மணிஅளவில்கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.இதனைத் தொடர்ந்து முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் தேவர் சமுதாய அமைப்புகள் பொதுமக்கள் என அனைவரும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். தேவர் சமுதாய அமைப்புகளின் சார்பில் முளைப்பாரி பால்குடம் காவடி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தேவரின் சிலைக்கு பால் அபிஷேகமும் செய்யப்படுகிறது. இதனை ஒட்டி தேவர் சிலைக்கு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் தற்போது பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்ற காரணத்தால், ஜெயந்தி விழாவை முன்னிட்டு தற்காலிகமாக அப்பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மேலும் முக்கிய பிரமுகர்கள் பலர் மரியாதை செலுத்த வருகின்ற காரணத்தால் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள விவரங்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் மாநகர் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. காலை 6:00 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளனமதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் வழியில் உள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளிலும் ராமநாதபுர,ம் சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பிட்ட சில முக்கியமானஇடங்களில்ட்ரோன்கேமராக்கள்மூலமாகவும்கண்காணிப்புமேற்கொள்ளப்படுகிறது. இன்றும் நாளையும் சில குறிப்பிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் நாளை மதுரை விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக பசும்பொன் சென்று அங்கு தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். முன்னதாக இன்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் செய்கிறார். நாளை காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு 8.30 மணியளவில் மாலை அணிவித்து விட்டு, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடம் செல்கிறார்..