நாளை காலை 11 மணிக்கு துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்க உள்ளார்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா கட்சிகளின் மகாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், துணை முதல்வசுனேத்ரா பவாரை துணை முதல்வர் அஜித் பவார், சென்ற விமானம் பாராமதியில் புதன்கிழமை காலை எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது.இதில் அஜித் பவார் மட்டுமின்றி, அந்த விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர். தொடர்ந்து அஜித் பவாரின் உடல் நேற்றைய தினம் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விமான விபத்தில் பலியானதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மகாராஷ்டிர துணை முதல்வர், நிதி அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியானது. அஜித் பவாருக்குப் பிறகு சுனேத்ரா பவாரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று அஜித் பவாரின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அஜித்பவாரின்உடல்தகனம்செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராமதியில் அஜித் பவாரின் ஆதரவாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பிரபுல் படேல், சாகன் புஜ்பால் ஆகியோர் சுனேத்ரா பவாரை சந்தித்தது மேலும் ஊகங்களை தூண்டியது. சுனேத்ரா பவார் என்சிபியின் தலைமையை ஏற்றுக் கொள்வதையும், துணை முதல்வர் பதவியையும் ஏற்பதையும் உறுதி செய்ய என்சிபி தலைவர்கள் முயற்சிப்பதாக கூறப்பட்டது.அஜித் பவாரின் செல்வாக்கைத் தொடர, சுனேத்ரா பவார், பார்த் பவார், ஜெய் பவார் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால், அஜித் பவாரின் செல்வாக்கு தொடர்ந்து கட்சியில் இருக்கும். கட்சி பாதுகாக்கப்படும் என்ற குரல்கள்
எழுந்திருந்தன. மீண்டும் என்சிபி கட்சி, சரத் பவார் உடன் இணையலாம் என்றும் பேச்சுகள் எழுந்தன.அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். இந்நிலையில், அவர் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சுனேத்ரா பவார் நாளை காலை 11 மணியளவில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவாரை துணை முதல்வர் பதவியில் அமர்த்தும் முடிவை பாஜகஏற்றுள்ளது.மகாராஷ்டிராவின் துணை முதல்வராக நியமிக்கப்படுவதற்கான முன்மொழிவை சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும், அஜித் பவார் கவனித்து வந்த துறைகளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு இலாகாக்களை அவர் தக்க வைத்துக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முக்கியமான நிதி அமைச்சகத்தை ஏற்றுக்கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பால், சுனேத்ரா பவாரை என்.சி.பி தலைவராக நியமிக்க ஜனவரி 31 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு கூடும் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அவர் விரைவில் துணை முதல்வராக ஆவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று முதல்வர் தேவேந்திர
ஃபட்னாவிஸ் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.சுனேத்ரா பவார் அக்டோபர் 18, 1963 அன்று மகாராஷ்டிராவின் தாராஷிவ்வில் அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பத்மசிங் பாட்டிலின் சகோதரி ஆவார். நீண்ட காலமாக அரசியலில் தீவிரமாக இருந்த இவர், 2024-ல் நேரடி அரசியலில் நுழைந்தார். 2024 மக்களவைத் தேர்தல்லில் இவர் தனது நாத்தனார் சுப்ரியா சுலேவை எதிர்த்து பாராமதி தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மக்களவை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, பிரஃபுல் படேல் காலியாக விட்டுச் சென்ற இடத்திற்கு சுனேத்ரா பவார் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.சுனேத்ரா ப்வார், 2010-ல் நிறுவப்பட்ட ‘என்விரான்மென்டல் ஃபோரம் ஆஃப் இந்தியா’ (EFOI) அமைப்பின் நிறுவனர் ஆவார். இந்த அமைப்பு சூழல் கிராமங்களையும் இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்கிறது. இந்த முயற்சிகளுக்காக இவருக்கு “கிரீன் வாரியர் விருது” வழங்கப்பட்டது. சுனேத்ரா பவார், பாராமதி டெக்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 2011 முதல், இவர் பிரான்சில் உள்ள உலக தொழில்முனைவோர் மன்றத்தின் சிந்தனைக் குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இவர் வித்யா பிரதிஷ்டான் என்ற கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராகப் பணியாற்றுகிறார். இந்த அறக்கட்டளை 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியைக் கவனித்து வருகிறது. சுனேத்ரா பவாருக்கு 1985-ல் அஜித் பவாருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்: பார்த் பவார், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஜெய் பவார், ஒரு தொழிலதிபர். குடும்பத்தை கவனித்துக் கொள்வதோடு, கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களையும் நிர்வகித்து வருகிறார்.