Others
நாரவாரிகுப்பம் பேரூராட்சியின்அடிப்படை வசதி இல்லாத தற்காலிகபஸ்ஸ்டேண்டு…?
அடிப்படை வசதி ஏதும் இல்லாத நாரவாரிகுப்பம் பேரூராட்சியின் தற்காலிக பஸ் ஸ்டேண்டு! உடனடி நடவடிக்கை தேவை !!குடியிருப்போர் நல சங்கம் கோரிக்கை!!!
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் உள்ள பஸ் ஸ்டேண்டு சீரமைப்பு பணிக்காக புழல் ஏரி கரைஓரம்தற்காலிகபஸ்ஸ்டாண்ட்அமைக்கப்பட்டுள்ளது . தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துபோகும் இந்த பஸ் ஸ்டாண்டில் குடிநீர், கழிப்பறை , நிழற்குடை வசதிகள் ஏதும் இல்லை. பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தையும் மாவட்ட ஆட்சியரையும் செங்குன்றம் பகுதி குடியிருப்போர் நவ சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.