fbpx
Others

நாகப்பட்டினம் அரசுமருத்துவமனை அவல நிலை.?.

லஞ்சம் கொடுக்க மறுப்புகர்ப்பிணிக்கு தரை படுக்கை‼️
செய்தியாளர் மனைவியானகர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்நாகப்பட் டினம் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவ பிரிவில் நடந்த கொடூரம்.மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர் , செவிலியர், காவலாளி வரை அனைவரும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண் நோயாளியிடம் மிகவும் தர குறைவான வார்த்தையில் பேசுவதும்,லஞ்சம் கொடுத்தால் அவர்களுக்கு முதல் உரிமையில் தேவையான உதவிகள் செய்வது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் பிரசவத்திற்காக வருகின்ற கர்ப்பிணி பெண்கள் மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்படும் அவல நிலை இன்று வரை உள்ளது.
லஞ்சம் கொடுத்தால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு உள்நோயாளியாக,அனுமதிக்கப்படுவதும். அவர்களுக்கு படுக்கை வசதிகள் செய்து கொடுப்பதும் நாகை அரசு மருத்துவமனையில் தினமும் நடக்கும் நிகழ்வாக உள்ளது.கர்ப்பிணி பெண்கள் உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் நிலையில் . பணியில் இருக்கின்ற ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்தால் படுக்கை வசதிகள் கிடையாது.திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி டைம் நியூஸ் இதழின் செய்தியாளராக பணியாற்றி வரும் மோகன் என்பவரை மனைவி நேற்று 20. 07. 2022, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அவரது மனைவியை உள் நோயாளியாக அனுமதித்துள்ளார்.அப்பொழுது மருத்துவமனையில் பணியில் இருந்த பணியாளர்கள் படுக்கை வசதி வேண்டுமென்றால் எங்களை கவனியுங்கள் என்று கூறினார்கள்.லஞ்சம் கொடுக்க மறுத்த தி டைம் நியூஸ் இதழின் திருவாரூர் செய்தியாளர் மோகன் அவர்கள். அவரது மனைவியை உள்நோயாளியாக அனுமதித்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்து விட்டார்.லஞ்சம் தராமல்இருந்த செய்தியாளரின் மனைவியை.ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லைபடுக்கை தராமல் தரையில் படுக்க வைத்துள்ளனர்.

செய்தியாளர் மோகன் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரது கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக மீண்டும் மருத்துவமனைக்குள் சென்று பார்த்தபோது அவரது மனைவிக்கு தரையில் படுக்க வைத்துள்ள அவல நிலையைக் கண்டு கலங்கி ஊழியர்களிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை.

செய்தியாளர் மனைவியின் பிரசவத்திற்காக லஞ்சம் கொடுக்க மறுத்த காரணத்தினால் தரையில் படுக்க வைத்த நிலை. நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் நடந்தேறி உள்ளது.
ஒரு செய்தியாளருக்கு இந்த நிலை என்றால், அந்தப் பகுதியில் வாழுகின்ற விவசாய தின கூலி மக்களின் நிலை என்ன ?.

லஞ்ச, லாவண்யங்களில் மூழ்கி இருக்கும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நிலையை தமிழக அரசு, சுகாதார துறை அமைச்சர், சுகாதார , முதன்மைச் செயலாளர் சுகாதார இயக்குனர் ,லஞ்ச ஊழல் கண்காணிப்பு பிரிவு உடனடியாக விசாரணை செய்ய வேண்டும்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்ற பணியாளர் குறித்துஉரியவிசாரணைசெய்துஉள்நோயாளியாகஅனுமதிக்கப்பட்டுள்ள பிற நோயாளிகளின் உயிருடன் விளையாடும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, நோயாளிகளின் உயிரை காப்பாற்றி உரிய சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்….மகேஸ்வரி வையாபுரி,

  1. வழக்கறிஞர்/ பொதுச் செயலாளர்,
    உபயோகிப்பார உரிமை இயக்கம்,
    சட்ட ஆலோசகர்,
    தி டைம் நியூஸ் இதழ்,
    திருச்சிராப்பள்ளி.
    தொடர்பு எண்; 95002 99882.
    94452 49446

Related Articles

Back to top button
Close
Close