நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு.
2024 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 50 பேரின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு.மதுரை டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன், வேலூர் ராஜகுப்பம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கோபிநாத் ஆகியோர் தேர்வு.செப். 5ல் டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ 50,000 ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மத்திய அரசு கல்வி நிதி ஒதுக்காததால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்பாதிப்புஎனஅமைச்சர்அன்பில்மகேஸ்தெரிவித்துள்ளார்.பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரவேண்டிய ரூ.573 கோடி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.அதுமட்டுமல்ல கடந்த ஆண்டு இறுதித் தவணையாக வரவேண்டிய ரூ.249 கோடியையும் மத்திய அரசு வழங்கவில்லை.புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது என அவர் கூறியுள்ளார்.