நம்பியூர் அருகே 8 வயது மகளுடன் இளம்பெண் மாயம் |
நம்பியூர் அருகே உள்ளகோட்டுப்புள்ளாம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 36). தொழிலாளி. அவருடைய மனைவி ரஞ்சனி (26). இவர்களுக்கு தீபக் (11) என்ற மகனும், மேகவர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆனந்தகுமாரின் ஆதார் மற்றும் பான் கார்டை பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனத்தில் ரஞ்சனி கடன் வாங்கி உறவினர் ஒருவருக்கு கொடுத்ததாக கூறப்படு கிறது. இதை அறிந்த ஆனந்தகுமார் அவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு ஆனந்த குமார் வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் காலை 7 மணி அளவில் ரஞ்சனி ஆனந்தகுமாருக்கு போன் செய்து, ‘நான் மேகவர்ஷினியுடன் வெளியில் செல்கிறேன். நாங்கள் இனி வரமாட்டோம். எங்களை தேட வேண்டாம். நான் ஓட்டி வந்த மொபட் கோபி நகராட்சி இருசக்கர வாகன நிறுத்ததில்உள்ளது.எடுத்துக்கொள்ளுங்கள்’எனகூறிஇணைப்பைதுண்டித்துவிட்டார்.”இதைத்தொடர்ந்து ஆனந்தகுமார் அங்கு சென்று பார்த்த போது மொபட் இருந்தது. பின்னர் ரஞ்சனியையும், மேகவர் ஷினியையும் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்கள் கிடைக்க வில்லை. இதுகுறித்து ஆனந்தகுமார் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சனி, மேகவர்ஷினியை தேடி வருகின்றனர்.