fbpx
Others

நம்பினோர் எல்லாம் துரோகிகளா இருக்கிறார்கள்… ராமதாஸ் கலங்கினார்…

தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் முழு வேகத்துடன் தயாராகி வருகிறது. மறுபுறம் இரு அணியாக செயல்பட்டு வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அணி, அதாவது அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான என்டிஏ Tamil Nadu Elections 2026 கூட்டணியில் இணைந்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் டாக்டர் ராமதாசும்-சசிகலாவும் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.முதலில் கூட்டணி அறிவிப்பு வந்ததும்.. அடேங்கப்பா…என பலரும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமலே இரண்டு பேரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வேட்பாளர்களோ, “எங்களுக்கே தெரியாமல் தேர்தலில் போட்டியிடுகிறோம் ” என்று புலம்பினர். இதனால் பல பேர் மனுதாக்கலோ செய்யவில்லை.
இந்த நிலையில், வேறு ஒரு கூத்தும் நடந்தது. அதாவது, விக்கிரவாண்டி தொகுதிக்கு புகழேந்தி என்பவரை வேட்பாளராக அறிவித்தார் ராமதாஸ். சீட் கேட்டு அவர் விருப்ப மனு எதுவும் தராத நிலையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேசமயம், ராமதாஸை சந்தித்து, தேர்தலில் சாதாரணமாக செலவு செய்யக்கூட என்னிடம் காசு இல்லை. கடனும் என்னை நம்பி யாரும் தரமாட்டார்கள். விற்பதற்கு சொத்தும் இல்லை. தேர்தல் செலவுக்கு அய்யா பண்ண தந்தால் நிற்கிறேன் ” என்று சொல்ல, ” தேர்தலுக்கு பணமெல்லாம் தேவையில்லை.நோட்டீஸ் அடிச்சு தரச் சொல்றேன். அதை வீடு வீடாக கொடுத்து ஓட்டுக்கேளு. உன் பெயரை அறிவிச்சிட்டேன். போய் ஓட்டுக் கேட்கிற வேலையை பாரு ” என்று சொல்லிவிட்டார். இதில் விருப்பமில்லாத புகழேந்தி, உடனே அன்புமணியை சந்தித்து அவருடன் இணைந்து விட்டார். இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த ராமதாஸ், குடும்ப உறுப்பினர்களிடம் எரிந்து எரிந்து விழுந்துள்ளார். யாரையெல்லாம் நம்புகிறேனோ அவர்கள் எல்லாம் துரோகிகளாக இருக்கிறார்கள் என்று புலம்பிக்கொண்டே அவர்களை திட்டித் தீர்த்து வருகிறாராம். இதனால் ராமதாஸ்க்கு அருகில் செல்லவே குடும்பத்தினர்கள் பயப்படுகிறார்களாம். அன்புமணியிடம் தஞ்சமடைந்து விட்ட புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கினார் ராம்தாஸ். இப்படி நிறைய சம்பவங்கள் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ராமதாஸை போலவே சசிகலாவும் வேட்பாளர்களை அறிவித்தார். இதை விரும்பாத பலர் மீண்டும் எடப்பாடியிடமே இணைந்து வருகின்றனர். உளுந்துர்பேட்டை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குமார், உடனே திமுக அமைச்சர் வேலுவை சந்தித்து திமுகவில் இணைந்து விட்டார். இதனால் அந்த தொகுதிக்கு மாற்று வேட்பாளரை அறிவித்துள்ளார் சசிகலா. இப்படி ராமதாஸ் அறிவிக்கும் வேட்பாளர்கள் அன்புமணியிடமும், சசிகலா அறிவிக்கும் வேட்பாளர்கள் அதிமுக எடப்பாடியிடம் சரண் அடைந்து வருவது இருவரையும் மன உளைச்சலில்தள்ளியிருக்கிறதாம்.

Related Articles

Back to top button
Close
Close