fbpx
Others

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திமுக மகளிர் அணிசார்பில்மகளிர் உரிமை மாநாடு.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் தொடங்கியது. மாநாட்டிற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்கிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஐக்கிய ஜனதா தளம் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், அமைச்சருமான லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், டெல்லி சட்டப்பேரவை துணை தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்திய பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.  திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றியுரையாற்றுகிறார். பெண்ணுரிமைப் போற்றும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் சென்னையை நோக்கி திரண்ட வண்ணம் உள்ளனர். இதனால், சென்னை நகரம் விழாக்ேகாலம் பூண்டுள்ளது. மாநாட்டை முன்னிட்டு ஒய்எம்சிஏ திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலை சுற்றிலும் 300 ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் அகில இந்திய தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகளை கலைஞர் சந்தித்து பேசியது, முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றது உள்ளிட்ட அரிய புகைப்படங்கள்வைக்கப்பட்டுள்ளது. .அதே போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த மகளிர் நல திட்டங்கள் தொடர்பாக புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணி அமைந்த பிறகு இதுவரை பொதுக்கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் மாநாடு நடைபெற்றாலும் இதில் பங்கேற்கும் அனைத்து பெண் தலைவர்களும் இந்தியா கூட்டணியை சார்ந்தவர்கள் ஆவர். இதனால், இது இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நிறைவுரையாற்றும் சோனியா காந்தி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close