நடிகர்விஜய் மீது பிணையில் வரக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு….

செவ்வாய்க் கிழமையன்று (ஆகஸ்ட் 26) பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷம் மற்றும் அவரது மகன் சரத்குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில், ‘ மாநாட்டின் முன்வரிசையில் விஜய் நடந்து வரும் பாதையில் அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது விஜய் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஆர்வத்தில் நடைமேடையின் மீது ஏறினேன்’ எனக் கூறியுள்ளார்.அப்போது தன்னை பவுன்சர்கள் சிலர் தூக்கி எறிந்ததாகக் கூறியுள்ள சரத்குமார், ‘இதனால் எனது மார்பகம் மற்றும் வலது விலா எலும்பில் அடிபட்டு வலி அதிகமாகிவிட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.’தற்போது வரை தவெக நிர்வாகிகள் யாரும் உதவிக்கு வராததால் விஜய் மீதும் பாதுகாப்புக்கு வந்த பவுன்சர்கள்மீதும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்’எனவும்தனதுமனுவில்கூறியிருந்தார். புகார் கொடுத்த பிறகு வெளியே வந்த சரத்குமாரிடம், ‘தூக்கி வீசப்பட்ட நபர் தான் அல்ல’ என மறுத்துப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தேன். உடல் வலி அதிகமாகிவிட்டதால் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது நான் தான்” எனக் கூறினார்.சிலரின் தூண்டுதல் காரணமாக புகார் மனு அளிக்க வந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்துப் பதில் அளித்த சரத்குமார், “என்னை யாரும் வற்புறுத்தவில்லை.நான்சுயநினைவுடன் தான் புகார் அளிக்க வந்தேன்” என்றார்.சரத்குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல்நிலையத்தில் தவெக தலைவர் விஜய், அடையாளம் தெரியாத பவுன்சர்கள் என பத்து பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவு 296(B), 182(2), 115(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுஇடத்தில்திட்டுதல்,தாக்குதல்நடத்துவதுஆகியவற்றைஇப்பிரிவுகள்குறிக்கின்றன.அதேநேரம், சம்பவம் நடந்த இடம் மதுரை மாவட்ட எல்லைக்குள் வருவதால் மாநாடு நடைபெற்ற
இடத்தின்எல்லைக்குள்வரும்கூடகோவில்காவல்நிலையத்துக்கு
வழக்கு மாற்றப்பட்டுஉள்ளது.
“பிணையில் வரக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் 296(B)பிரிவின்படி மூன்று மாதம் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்” என்கிறார்.115(2) பிஎன்எஸ் பிரிவின்படி, தானாக காயம் (voluntarily causing hurt) ஏற்படுத்துதல் பிரிவில் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப.மனோகரன் குறிப்பிட்டார் ..”மாநாட்டில் விஜயின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாமே தவிர, தவெக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” என்கிறார்,