fbpx
Others

(த.ம.மு.க.)-பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலை கண்டித்துஆர்ப்பாட்டம்.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்ற கழகம் (த.ம.மு.க.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.  இஸ்ரேல்-பாலஸ்தீனபாலஸ்தீனம் மீது தாக்குதல் தொடுத்த இஸ்ரேலை கண்டித்து த.ம.மு.க. ஆர்ப்பாட்டம் மோதலின் உச்சக்கட்டமாக ஹமாஸ் இயக்கத்தினர் திடீரென இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடங்கினர். இதையடுத்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது.இந்தநிலையில் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.ம.மு.க.) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு த.ம.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஹாஜாகனி, மனிதநேய மக்கள்கட்சி பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஆர்ப்பாட்டத்தின்போது ஜவாஹிருல்லா பேசுகையில், 1947-ம் ஆண்டுக்கு முன்பாக ஒற்றை தேசமாக இருந்த பாலஸ்தீனத்தைஅபகரித்தஇஸ்ரேல்,இப்போதுமிச்சமீதியிருக்கும்பாலஸ்தீனத்தை முழுவதுமாக கைப்பற்றிட துடித்து பாசிச போக்கை கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து பாலஸ்தீனத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது. இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இஸ்ரேலை ஆதரிப்பது இந்திய அரசுக்கு நியாயம் என்றால்,ரஷியா – உக்ரைன் போரின் போது ஏன் நடுநிலை காத்தது. இஸ்ரேலின் பாசிச போக்கைகண்டிக்கும் அதேவேளை, முழுமையான பாலஸ்தீனம் மலர மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா தனது பங்களிப்பை அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close