fbpx
Others

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? விவரம்…..

தேர்தல் பத்திரங்கள் என்பது இந்தியக் குடிமக்களும் நிறுவனங்களும் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு வழிமுறையாகும்.2017 இல் தேர்தல் பத்திரங்கள் நிதி மசோதாவை அறிமுகம் செய்த பாஜக அரசு, மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே 2018 ஜன., 29இல் அதனை நடைமுறைப்படுத்தியது. உறுதிமொழி பத்திரங்களான இவை SBI வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கிளைகளின் மூலம் மட்டுமே விற்கப்பட்டன. SBI வங்கியில் மட்டுமே விற்கப்பட்ட பத்திரங்கள்  SBI வங்கியில் ரூ.1,000 – ரூ.1 கோடி வரையிலான மதிப்பு கொண்ட வங்கிப் பணத்தாள் போலவே தேர்தல் பத்திரங்களும் விற்கப்பட்டன.இவை 15 நாள்கள் மட்டுமே ஆயுள் கொண்டவையாகும். இந்த பத்திரங்களை KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு நபரும் டிஜிட்டல் அல்லது காசோலை மூலம் வாங்க அனுமதிக்கப்பட்டது.பணம் செலுத்துபவரின் பெயர் அப்பத்திரங்களில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.நன்கொடையாளர்களுக்கு வருமான வரி விலக்கு   இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே தேர்தல்பத்திரங்களைநன்கொடையாகசெலுத்தும்வாய்ப்புவழங்கப்பட்டது.நன்கொடையாளரின் பெயர் இல்லாத பத்திரங்களாக இவை விற்கப்பட்டதால் வாங்கியவரின் அடையாளத்தை அரசியல் கட்சிகள் அறிய முடியாது என கூறப்பட்டது.     பத்திரங்களை நன்கொடையாக செலுத்தும் நபர் & பெறும் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close