fbpx
Others

தேர்தல் ஆணையம்–புதிய வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே இலவசமாக வருகிறது…

15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, இவிஎம் இயந்திரங்களை பரிசோதிப்பது போன்ற  பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது. அந்த வகையில் தமிழகத்திலும்  கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வந்தது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர்பட்டியல்  தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றதுவெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் பட்டியலில்உயிரிழந்தவர்கள்,முகவரிமாறியவர்கள் உள்பட 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். 5.43 கோடி வாக்காளர்கள்வாக்காளர்பட்டியலில்பெயர்இடம்பெற்றிருந்தது. சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெயரை சேர்க்க, திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டதில் பல லட்சம் பேர் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்தனர்.அந்த வகையில் தற்போது வரை 16 லட்சம் பேர் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 80 ஆயிரம் பேர் பெயர்களை நீக்கவும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து ஜனவரி 18ஆம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  எனவே தற்போது வரை புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியிலில் சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. புதிதாகவிண்ணப்பித்தவர்களுக்குஎஸ்எம்ஸ்மூலம்வாக்காளர்பெயர்பட்டியலில்பெயர்இடம்பெற்றுள்ளதுதொடர்பானவாக்காளர்அட்டைஎண்அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து எஸ்ஐஆர்க்கு பிறகு பெயர் சேர்க்க விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே இலவசமாக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close