தேனி–வேப்பம்பட்டியில், ஆம் ஆத்மி கட்சி தெருமுனைப் பரப்புரை….
தேனி மாவட்டம், வேப்பம்பட்டியில், ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சிவாஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் மூன்று முறை டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விளக்கி தெருமுனைப் பரப்புரை செய்தார். அப்போது ஆம் ஆத்மி ஆட்சிசெய்யும் முதல்வர் அதிஷி தலைமையிலான டெல்லி மற்றும் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசுகளின் சாதனைகளான உலகத் தரம் வாய்ந்த பள்ளி கட்டிடங்கள், கட்டணமில்லா கல்வி, படித்து முடித்தவுடன் வீட்டில் ஒருவருக்கு கட்டாய அரசு வேலை, கட்டணமில்லா குடிநீர், கட்டணமில்லா தடையில்லா மின்சாரம், தெருவெங்கும் உலகத் தரம் வாய்ந்த மொஹலா கிளினிக் கட்டடம், கட்டணமில்லா தரமான சிகிச்சை, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, புனித தலங்களுக்கு போய் வர கட்டணமில்லா போக்குவரத்து வசதிகள், மகளிருக்கு உதவித்தொகை போன்ற இன்னும் பல சாதனைகளை விளக்கினார். கூட்டத்தில் இணைச் செயலாளர் வேல்பாண்டியன், பெத்தணன், குருசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.