fbpx
Others

தேனி, வருசநாடு பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை

மோசமான சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்கவேண்டும் — சமூக ஆர்வலர் வேல்முருகன்

,,  தேனிவருசநாடு பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளை சீரமைத்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான சுமார் 10 கிமீ தொலைவிலான தார்ச்சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே புதிய தார்ச்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு,  அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.  அப்போது சாலையில் குறிப்பிட்ட பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறி தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள 5 கிமீ தொலைவிலான பகுதியில் தார்ச்சாலை அமைக்க வனத்துறையினர் தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியில் மட்டும் தார் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக காணப்படுகிறது.  இந்த பகுதியில் மட்டும் நாள்தோறும் பைக், ஆட்டோ, ஜீப், டாட்டாஏசி, உள்ளிட்ட வாகன விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துகளில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அதேபோல சேதமடைந்த சாலையால் விவசாய விளைபொருட்களை தேனி, சின்னமனூர் கம்பம் ஆண்டிபட்டி உள்ளிட்ட சந்தைகளுக்கு உரிய நேரத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருசநாடு-வாலிப்பாறை இடையே முழுமையாக தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில்‌, ‘‘வருசநாடு-வாலிப்பாறை இடையிலான சாலைகள் மூன்று தலைமுறையாக நடைமுறையிலிருந்தது. தற்போது தார்ச்சாலை பணியை வனத்துறை தாமதிப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, விரைவில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். *தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இதில்  தேனி நகரின் முக்கிய பகுதியான சடையாள் கோயில் தெரு உள்ளது. இத்தெருவின்  வழியாக சென்றால் சுப்பன் தெருவில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட  திட்டச்சாலையை அடைந்து அங்குள்ள சடையாள் கோயில் செல்ல பாதை உள்ளது. இந்த  சடையாள் கோயில் தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இத்தெருவின் நடுவே  ராஜகண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு வீடுகளும் அதிக அளவில் உள்ளன.  தேனி நகர் மதுரை சாலையில் இருந்து இத்திட்டச்சாலைக்கு செல்ல சுப்பன்தெரு  இணைப்பு சாலை, பங்களாமேடு இணைப்பு சாலை, சோலைமலை அய்யனார் கோயில் தெரு  இணைப்பு சாலை, பென்னிகுக் நகர் பிரிவு இணைப்பு சாலைகளில் தார்ச்சாலைகள்  அமைக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், சடையாள் கோயில் தெருவில் உள்ள சாலை  போடப்படாமல் உள்ளது. இதனால் இச்சாலையில் குப்பைகள் குவிந்து  போக்குவரத்திற்கு லாயக்கில்லாமல் சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே, இத்தெருவில்  தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர் ..

Related Articles

Back to top button
Close
Close