தேனி வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..
GreetingsfromIndianRedCross Society,Theni District.
வணக்கம்.இன்று காலை 11.00 மணியளவில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேனி, A.H.M.டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள் தலைமை வகிக்க, மாவட்ட பொருளாளர் திரு.எஸ்.முகமது ஷேக் இப்ராகிம் அவர்கள் முன்னிலை வகித்தார்.தேனி மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் இருந்து ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.ரெட் கிராஸ் அமைப்பின் செயல்பாடுகளை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.தத்தம் ஒன்றியங்களில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் இரத்தக் கொடையாளர்கள் ரெட் கிராஸ் சீருடையில் இருப்பதை உறுதி செய்யவும், மாதம் ஒரு செயல்பாடு நிறைவேற்றவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டம் நடத்த அனுமதி வழங்கியதோடு மதிய உணவு வழங்கிய நமது பொருளாளர் திரு.எஸ்.முகமது ஷேக் இப்ராஹிம் அவர்களுக்கும், கலந்துகொண்ட தன்னார்வலர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். ஆண்டிப்பட்டி செய்தியாளர் வேல்முருகன்