fbpx
Others

தேனி–மீறு சமுத்திரம் கண்மாயினை தூர்வாரி தூய்மைப் படுத்துதல்.

தேனியில் உழவர் சந்தை அருகில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாயினை தூர்வாரி தூய்மைப் படுத்துதல்!!! தேனி அல்லிநகரம் பகுதியின் பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக திகழும் மீறு சமுத்திரம் கண்மாயானது ஆகாயத்தாமரை முழுவதும் படர்ந்தும், கண்மாயின் அருகில் உழவர் சந்தையில் சேகரமாகின்ற காய்கறி கழிவுகளை கொட்டுவதும், அரசின் அனுமதி பெறாத டாஸ்மாக் திறந்த வெளி பாராகவும் உள்ளது, இதனால் இந்த பாதையில் பொதுமக்கள் பயந்த வண்ணம், மூக்கினை பிடித்துக் கொண்டும் பயந்தபடி செல்லும் அவல நிலை !!! மேலும் இந்த குறையை எப்படி ? எப்போது சரி செய்யப்படும் என்றே தெரியவில்லை ??? மேலும் கண்மாயைச் சுற்றிலும் நடை மேடை அமைத்து படகு சவாரி ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து தேர்தலை சந்தித்தவர்கள் பின்னர் இதைக் கண்டுகொள்வதில்லை.தேனி ராஜவாய்க் கால் போல விரைவில் மக்கள் இயக்கமாக மாற இருக்கிறது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…. இவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என தேனி வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்???…………………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close