fbpx
Others

 தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கைகள்…

 தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கைகள்  கோட்ட ரயில்வே மேலாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது ..

1மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய வண்டி எண் 20602/ பார் 20601 (A/C எக்ஸ்பிரஸ்) ரயில் தங்களின் முயற்சியால் போடியிலிருந்து இயக்கப்பட உள்ளதற்கு தங்களுக்கு நன்றிகளை உ தெரிவித்துக் கொள்கிறோம் இந்த ரயில் தற்போது வாரம் மூன்று நாட்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செயல்படுத்தப்படாமல் உள்ளது எனவே உடனடியாக இந்த ரயில் தடத்தை இயக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  2.போடி தேனி ஆண்டிபட்டி மற்றும் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுரைநகருக்கு படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக பல்வேறு தரப்பினரும் சென்று வர காலை 8 மணி அளவில் போடியில் இருந்து கிளம்பி மதுரைக்கு சென்று மாலை 6:00 மணிக்கு மதுரையிலிருந்து போடி வரை ஒரு ரயில் இயக்க ஆவண செய்ய வேண்டுகிறோம்.

3. போடி ரயில் நிலையத்திலிருந்து மேலும் பல ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக பிட் லைன் எனப்படும் ரயில் பராமரிப்பு மையம் ஏற்படுத்தித் தர வேண்டும்.4.தேனி மாவட்ட மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான திண்டுக்கல் லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்டம் 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் சபரிமலை என மாற்றப்பட்டு தற்பொழுது ரயில்வே அமைச்சகத்தில் உள்ள ரெக்கார்டுகளின் படி செயல்படுத்த முடியாத திட்டங்கள் பட்டியலில் உள்ளது. எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் லோயர் கேம்ப் திட்டத்தை முதல் கட்டமாகவும், லோயர் கேம்ப் சபரிமலை திட்டத்தை அடுத்த கட்டமாக என இரண்டு கட்டங்களாக நிறைவேற்ற ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்புமாறு வேண்டுகிறோம்.

 

Related Articles

Back to top button
Close
Close