fbpx
Others

தேனி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காணவில்லையா…?

தேனிமாவட்டம்,தேனி அல்லிநகரம் நகராட்சியின் அவலநிலை!!! மற்றும் அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார சீர்கேடு!!! உடனடியாக நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகமும் ?, நகராட்சி நிர்வாகமும்??? தேனி மாவட்டம், தேனியில் 18 வது வார்டில் உள்ள ஓடைத்தெருவில் பொது மக்கள் இந்த தெருவில் நடந்து செல்ல முடியாத அவலநிலை ! தெரு வில் முழுமையாக கழிவுநீர் ஆக்கிரமிப்பு, இதன் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக நோய் வழங்கும் திட்டம் ஏதாவது நகராட்சி நிர்வாகத்திடம் உள்ளதா? வரிவசூல் செய்வதில் காட்டும் தீவிரம் ஏன் சுகாதாரப் பராமரிப்பு பணிகளில் காட்டுவதில்லை! இங்கு மட்டும் அல்ல, அனைத்து வார்டுகளிலும் இதே நிலைதான்! ஆங்காங்கே குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன, பொதுமக்கள் கேட்டால்…. இங்கு குப்பைகளை மொத்தமாக சேகரம் செய்து குப்பைகளை அகற்றிவிடுவோம் என்று கூறுகின்றனர்.ஆனால் இந்த குப்பைகளில் ஆங்காங்கே உள்ள இறைச்சி கடைகள் மூலம் மீன், கோழிக் கழிவுகள், கெட்டுப் போன கழிவுகள் கொட்டப்பட்டு, அள்ளப் படுவதில்லை…… இவற்றால் சாலைகளிலும், தெருக்களிலும் மக்கள் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!! இந்த துர்நாற்றத்தினால் கழிவுநீர் சாக்கடையின் பராமரிப்பு இல்லாததாலும், மக்களுக்கு விரைவில் நோய் தொற்றும் அவலநிலை? இவற்றை எல்லாம் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறை நிர்வாகமும் போர்கால நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இலவசமாக நோய் வராமல் தடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என்று சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடகங்களும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்!!! இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம் என்று பொதுமக்கள் பேசுவது நம் காது பட நன்கு கேட்க முடிகிறது? உடனடியாகநடவடிக்கைஎடுப்பார்களா?..

யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர்,தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close