fbpx
Others

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தி.

தேனி மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட செய்தி.

தேனி : ஜுன் : 24.தேனி மாவட்டம் முழுவதிலும் காணாமல் போன சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 மொபைல் போன்கள் மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த தேனி மாவட்ட காவல்துறை . தேனி மாவட்டத்தின்அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து தங்களது மொபைல் போன்கள் தொலைந்தது சம்பந்தமாக சம்பந்தபட்ட காவல்நிலையங்களிலிருந்து இதுவரை சுமார் 1365 புகார்கள் பெறப்பட்டுள்ளன . அதன்படி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . டோங்கரே பிரவின் உமேஷ் . இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட cyber cell மூலம் விசாரணை செய்யப்பட்டு அத்தகைய காணாமல் போன மொபைல் போன்கள் கண்டுபிடிக்கபட்டு தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் உதவியின் மூலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது . அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 714 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . இந்த மாதம் மட்டும் சுமார் 15 லட்சம் மதிப்புள்ள 110 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு , மீட்கப்பட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் மொபைல் போன்களை தவறவிட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . மேற்படி நிகழ்ச்சியில் திருகார்த்திக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , சைபர் கிரைம் பிரிவு போலீசாரும்உடன் இருந்தார்..

Related Articles

Back to top button
Close
Close