fbpx
Others

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் —சிறப்பு செய்தி .

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரை கடந்த 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட செய்தி யாவரும் அறிந்ததே.பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் குடிநீருக்காகவும், மருந்துகளுக்காகவும், உணவிற்காகவும் அல்லல்படும் சூழல் உருவாகியுள்ளது.இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மனித சொந்தங்களை காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் ரெட் கிராஸ் அமைப்பிற்கு உள்ளது.ஆகவே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை நகர பொது மக்களுக்கு உதவிடும் நோக்கில் வெள்ள நிவாரண பொருட்கள் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.அனைத்து ரெட் கிராஸ் உறுப்பினர்களும் தங்களால் இயன்ற உணவுப் பொருள்கள், மெழுகுவர்த்திகள், பிஸ்கட் பாக்கெட், அரிசி,பருப்பு, சமையல் எண்ணெய், நாப்கின்,போர்வைகள், கைலிகள், சிறுவர் உடைகள் போன்ற பொருள்களை பொதுமக்களிடம் சேகரித்து தேனி பாரஸ்ட் ரோடு அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி அன்புடன் வேண்டுகிறேன்.பாதிக்கப்பட்டுள்ள மனித உயிர்களுக்கு இது நாம் செய்யும் மனிதநேய கடமையாகும் .  என் வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்

Related Articles

Back to top button
Close
Close