fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

போலீஸ் கமிஷனரை கைதுசெய்யக்கூடாது – சுப்ரீம்கோர்ட் உத்தரவு;மம்தா பானர்ஜி மகிழ்ச்சி

சாராத சிட்பண்ட் , ரோஸ்வெலி சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இரு மோசடி வழக்குகள் தொடர்பாகவும் கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம் விசாரணை நடத்த நேற்று முன்தினம் அவரது வீட்டிற்க்கு சிபிஐ சென்றனர்.

ஆனால் கமிஷ்னர் வீட்டில் பாதுகாப்பிற்கு இருந்த உள்ளூர் போலீசாரால் சிபிஐ தடுத்து நிறுத்தப்பட்டு போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேற்குவங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேரடியாக போலீஸ் கமிஷனரின் வீட்டிற்கு விரைந்து சென்றார். இவ்வாறு போலீஸ் கமிஷ்னரின் மீது நடவடிக்கை எடுக்க முயலும் மத்திய அரசை கண்டித்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3-ஆவது நாளான இன்றும் அவரது தர்ணா போராட்டம் நீடித்து வருகிறது. மேலும் அவரது கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோர்ட் உத்தரவை அடுத்து மம்தா பானர்ஜி பேசியதாவது ;

சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்கமாட்டோம் என்று கூறவில்லை.போலீஸ் கமிஷ்னரை கைது செய்யக்கூடாது என்று சுப்ரிம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரிம் கோர்ட்டின் இந்த உத்தரவு மூலம் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். அரசியல் பயன்பாட்டிற்கு சிபிஐ பயன்படுத்தப்படுவதை நங்கள் எதிர்க்கிறோம்.

நீதித்துறை மற்றும் மற்ற நிறுவனங்களுக்கும் நாங்கள் மிகவும் மரியாதை செலுத்துவோம். நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close