fbpx
Others

தேனி மாவட்டம் கூடலூர்–உலக சுகாதார தினம் செய்தி


ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு. இன்று 9.4.2023 இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஒழுங்கினைந்த மருத்துவ முகாம், தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ளபளியங்குடியில் பழங்குடி மக்களுக்காக நடத்தப்பட்டது.
இம்முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு கண்டறிதல், புற்றுநோய் கண்டறிதல், கண் பரிசோதனை மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம், கல்வி மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மருத்துவ மமுகாமில் டாக்டர் P.அழகர்சாமி, கோபாலகிருஷ்ணன், முருகன், காஞ்சனா, பூர்ணிமா, பாரதி, மகேஸ்வரி, அமுதினி, திலிப் குமார், வேல்மணி, பானுமதி, சிவ லட்சுமி, சிவ இளங்கோ, மணி மோகன், பாண்டியன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இன் கம்பம் கிளையின் சார்பாக 50 குடும்பங்களுக்கு சுகாதார பெட்டகம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் நெகிழிப் பையை ஒழிப்பதற்காக துணிப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர் பாண்டி, சுருளிப்பட்டி அன்பு ராஜா, ராமமூர்த்தி, சோமநாதன், நவநீதி சஞ்சீவி, வேல்சரண், ஆசிரியர் முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்.
நன்றி

Related Articles

Back to top button
Close
Close