fbpx
Others

தேனி மாவட்டதிட்ட (PO) அலுவலருக்கு அரிவாள்வெட்டு

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டபணி திட்ட (PO) அலுவலருக்கு அரிவாள்வெட்டு

தேனி: மே:30 தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணிபுரிபவர் ராஜராஜேஸ்வரி(52) என்பவர் ஆவார்.இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு உமாசங்கர் ( 56 )என்பவர் தேனி மாவட்ட சமுகநலம் மற்றும் ஒருங் இணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.இந்தநிலையில் உமாசங்கர் அலுவல் பணிகள் கோப்புகள் மறுசீரமைப்பு போன்ற வேலைகளில் தனது கை வண்ணத்தை காட்டி வந்த நிலையில் ஜூனியர் அசிஸ்டென்ட் உமாசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வண்ணம் 70b விதிமுறையின் கீழ் துறைரீதியா அலுவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார் அதன் பின்னர் உமாசங்கரை இடம் மாறுதலாக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக இடம்மாறுதல் செய்து உள்ளனர்இந்நிலையில் கோபம் அடைந்த உமாசங்கர் ஜூனியர் அசிஸ்ட் ராஜராஜேஸ்வரியை பழிவாங்கும்எண்ணத்தோடு ஐந்தாண்டு காலம் காத்திருந்து நேற்று மதியம் ஒரு மணி அளவில் ராஜராஜேஸ்வரி இருந்த அலுவலகத்தில் திடீர் என நுழைந்த உமாசங்கர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ராஜேஸ்வரியின் தலை மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டார் இந்த சம்பம் பற்றி தகவல் அறிந்ததும்,மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட உமாசங்கரை கைது செய்து பின்பு அவர்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்இச்சம்பவத்தால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்தவர்கள் அலரி அடித்து ஓடினார்கள் மேலும்அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையும்காணப்படுகின்றன.

Related Articles

Back to top button
Close
Close