fbpx
Others

தேனி மாவட்டஆட்சியரின்கவனத்திற்க்கு.. WHY NOT…?

தமிழ்நாடு – தேனி  மாவட்டஆட்சியரின் கவனத்திற்க்கு  உத்தமபாளையம் தாசில்தாருக்காக காலை முதல் தற்போது வரை தாலுகா அலுவலகத்தில் காத்திருந்த பாதிக்கப்பட்ட குடும்பம்…? கலெக்டர் மீட்டிங் என காலையில் சென்றவர் இன்னும் வரவில்லையாம் புலம்பும் புகார்தாரர்……

ஜன.22 நேற்று காலை 10:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை வேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 95 வயது முதியவர் ராமசாமி என்பவர் “வருவாய்த் துறையினரே, தனது நிலத்தை மீட்டு வாழ வழி விடுங்கள். இல்லையேல் கருணை கொலை செய்திட அனுமதி தாருங்கள் மாவட்ட நிர்வாகமே… ” என வேப்பம்பட்டி விஏஓ அலுவலகம் முன்பு காலை 10:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை தொடர்ச்சியாக 07 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டிருந்தார்…….   அதனைத் தொடர்ந்த பேச்சுவார்த்தையின் பின்பு ஜன.23 இன்று காலை தாசில்தார் அலுவலகம் வரவும் காவல்துறை உதவியுடன் உங்களது இடத்தை அளந்து கொடுத்து உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வட்டாட்சியர் தரப்பு தெரிவித்திருந்தது..வட்டாட்சியர் அலுவலகம் தரப்பு கூறியதை வைத்து அதையும் நம்பி இன்று காலை 10:30 மணி முதல் தற்போது இந்த நேரம் வரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கார் பார்க்கிங் அருகே உள்ள மரத்தடியில் சோறு, தண்ணீர் இல்லாமல் சொல்வதும், செய்வதும் அறியாது விழிப் பிதுங்க அமர்ந்து இருந்தார்கள்..பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 96 வயது முதியவருடன் நேற்று காலை முதல் மாலை வரை விஏஓ அலுவலகத்தில் தர்ணாவில் இருந்து விட்டு இன்று தாசில்தார் அலுவலக வளாக மரத்தடியில் கட்டெறும்புகளிடம் கடி வாங்கி அந்த கட்டெறும்புகளுக்கு கூட தெரிகிறது ஓ… இவர்கள் தான் சாமானியர்களா…? எனதாக காலை முதல் தற்போது வரை அமர்ந்து இருந்தார்கள்…….

அதுசமயம் இன்று காலையில் கம்பம் செல்வதாக கூறிச் சென்ற வட்டாட்சியர் அவர்கள், நண்பகலுக்கு மேல் கலெக்டர் அலுவலக மீட்டிங்கில் இருப்பதாக தகவல் தெரிவித்து இருக்கிறார்……

கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருப்பதாக கூறி வரும் தாசில்தார் அவர்களை பாவப்பட்ட இந்த சாமானிய குடும்பத்திற்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டி நமது தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர். வி.சஜீவனா உத்தமபாளையத்தில் இருக்கும் வட்டாட்சியர் அலுவலகம் வரச்சொல்லி வழி அனுப்பி வைத்தால் சிறப்பு…ஜனவரி 23 இன்று வட்டாட்சியர் தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பிற்கும் இடையே…!!!   வட்டாட்சியர் அலுவலக/ வருவாய்துறை தரப்பினர்……..அத்துமாலுக்கு பணம் கட்டுங்கள் உங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து விடுகிறோம்.பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர்….ஐயா, நாங்கள் ஏற்கனவே மூன்று முறை அத்துமாலுக்கு பணம் கட்டி இருக்கின்றோம்.ஐந்து முறை எனது நிலத்திற்கு வரச் சொல்லி குறிப்பாக, எதிர் மனுதாரர் இல்லாமல் என் இடத்திற்கு வரச் சொல்லிமூன்று முறையும் தேவையே இல்லாமல் இழுத்தடித்து எனது அனுமதி இல்லாமல் எந்த முகாந்திரமும் இன்றி “சர்வேக்கு பணம் கட்டினால் ரிஜெக்ட்… சர்வேக்கு மறைமுகமாக பணம் கட்டினால் அக்செப்ட்…” என்ற ரீதியில் ரிஜெக்ட் செய்திருக்கிறீர்கள்.

இது இன்று இப்போ நடக்கும் நிகழ்வல்ல இன்றோடு கடந்த 18 மாத காலமாக துறை சார்ந்த ஒவ்வொரு அலுவலகமாக ஏறி, இறங்கி மனுக்களை பண்டல் கணக்கில் கொடுத்து வேறு வழியில்லாமல் உங்கள் சொல் கேட்டு இன்று மரத்தடியில் உங்களுக்காக அமர்ந்திருக்கின்றோம்.அத்துமால் கட்டுங்கள் என்று கூறுகிறீர்கள் இதற்கு முன் கட்டிய அத்துமால்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்.எனது நிலத்தை மீட்டெடுக்க வேண்டி நான் கொடுக்கும் மனுக்களை எல்லாம் எதிர் மனுதாரரிடம் MONEY ஆக்கி வருகிறார்களா ??? என்கின்ற சந்தேகம் தற்போது எங்களுக்கு…….ஏற்கனவே 18 மாத காலம் இழுத்தடித்து விட்டீர்கள்…! இன்னும் ஒரு நாள் ஓடிவிட்டாள் அடுத்த நான்கு நாள் தொடர்ச்சியாக அரசு விடுமுறை தினங்கள் வருகின்றது. அப்படியே இழுத்தடித்துக் கொண்டே ஓடி விடலாம் என்ற எண்ணமா ???  என் நிலத்தை மீட்க 18 மாத காலமாக போராடி முதலில் எனது வேலையை பறிகொடுத்து என்னால் எவ்வளவு போராடி செலவு செய்ய முடியுமாே அவ்வளவும் செலவு செய்து விட்டேன்.   வேலையும் இல்லை, எனது நிலமும் என்னிடத்தில் இல்லை. நாளை முதல் தெருவில் அமர்ந்து பிச்சை தான் எடுக்க வேண்டும் என் நிலத்தை மீட்க…என தந்தைக்காக புலம்பும் மகள்…..என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புலம்பிய படி…!!!

இது குறித்து தகவல் சேகரிக்க உத்தமபாளையம் வட்டாட்சியரை தொடர்பு கொண்டோம் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இது நமக்கு தெரிந்ததே…!!!

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக இதே வட்டாட்சியர் அவர்களிடம் 07 முறை மனு அளித்துள்ளனர். 07 முறை மனு நிலைமையும், கோமாவில் இருந்து வருவதென்பது குறிப்பிடத்தக்கது…!!!

அதற்கு அடுத்ததாக கோட்டாட்சியர்  பால்பாண்டி  தொடர்பு கொண்டோம் அவர் எதற்கெடுத்தாலும் அலுவலகம் வாருங்கள்… அலுவலகம் வாருங்கள்… என்று கூலாக பதில் சொல்லி மழுப்புகிறார். நேரில் தான் வந்து தகவல் கேட்க வேண்டுமென்றால் அவருக்கு பிடித்த பத்திரிக்கையாளர்களை வரவழைத்து 18 மாத காலமாக போராடி வரும் இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாகவோ மாறாக எதிராகவோ எங்களது நிர்வாக தரப்பில் எந்த சீர்கேடும் நடைபெறவில்லை என ஒரு அறிக்கை வெளியிடலாமே…!!!

பாதிக்கப்பட்டவர் வசதி, வாய்ப்புடன் இருந்தால் துறைகள் கொஞ்சம் கீழே இறங்கும். பாதிக்கப்பட்டவர்கள் சாமானிய, நடுத்தர வர்க்கத்தினர் தானே, தெருவில் தான் நிற்க வேண்டும். அதன் பலனாக நடு தெருவில் நிற்பது போல உணர்ந்து உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 06 மணி நேரம் நிற்கதியாய் நின்றனர்……..அதிலும், பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்தினரைப் போல அனைத்து வருவாய்த் துறையில் நடைபெற்று வரும் அலைக்கழிப்புகள் எக்கச்சக்கம்….. மாவட்டத்தில் சாமானியர்கள் படும் சிரமங்களும், அவலங்களும்  தேனி மாவட்ட ஆட்சியருக்கு வெளிச்சம்…??? இவற்றை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்???…… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close