fbpx
Others

தேனி- போக்குவரத்து காவல் அதிகாரிகள்நடவடிக்கைஎடுக்க தயங்குவது ஏன்.?

  தேனி மாவட்டம் தேனி பெரியகுளம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சாலைகளில் பணம் நிரப்புகின்ற வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு பாதசாரிகள் நடப்பதற்கு இடையூறாக அடிக்கடி சாலையில் வாகனங்களை நிறுத்தி இடைஞ்சல் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர் இந்த தகவலை பலமுறை நகராட்சிக்கும், போக்குவரத்துக் காவல் துறைக்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் பல முறை தெரியப்படுத்தியும் இவற்றை கண்டு கொள்வதே இல்லை. மேலும் இந்த மாதிரி வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு இருந்தால் மக்கள் எவ்வாறு சாலையில் நடந்து செல்ல முடியும்.. கொஞ்சம் நகர்ந்து சென்றாலும் பெரும் விபத்துகள் ஏற்பட்டு விடும் போல் உள்ளது,இதை உடனடியாக போக்குவரத்து காவல்துறை சீர் செய்ய வேண்டும்…. தேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா ??? ஏன் இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை மாவட்ட நிர்வாகமும் சரி, போக்குவரத்துக் காவல் துறையும் சரி, நகராட்சியும் சரி ஏன் இவற்றை கண்டு கொள்வதே இல்லை இந்த பெரியகுளம் செல்லும் சாலையில் நடப்பதற்கே பயமாக இருக்கிறது…… நாங்கள் அரசு செய்தி இவற்றைப் பற்றி பல முறை செய்திகள் வெளியிட்டும் கண்டு கொள்ளாமலே தான் இருக்கின்றார்கள்..??? இவற்றை உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேனி போக்குவரத்து காவல் துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என தேனி நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்!!! மேலும் இந்த இடத்தில் போக்குவரத்து காவல்துறையினர் நின்று போக்குவரத்து இடையூறு செய்யும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லா விடில் பெரியகுளம் சாலையில் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறிக் கொள்கின்றனர் இந்த சம்பவத்தை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மக்கள் கூறுகின்றனர், இதை செவிடன் காதில் சங்கு ஊதியது போல் விட்டு விடாமலும், இந்த சம்பவத்தை காற்றில் பறக்க விடுவது போல் விட்டு விடாமல் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகின்றோம் என தேனி நகர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் தேனி மாவட்ட செய்தியாளர் அ.ந வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close