fbpx
Others

தேனி–பெரியகுளம் ஒன்றியத்தில் நடப்பது என்ன?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்தில் கடன் வாங்கிய பெண்ணை மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்….???? இந்த பெண் தற்கொலை….!!! தேனி மாவட்டத்தில் நடப்பது என்ன??? தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் எருமலை நாயக்கன்பட்டியில் வசிக்கும் சந்திரா என்பவர் ஈகுடாஸ் என்ற தனியார் வங்கியில் வீட்டு கடன்பெற்றுள்ளார். வாங்கிய கடனையும், தொடர்ந்து பணம் கட்டி வந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தொடர்ந்து இந்த தவணைத் தொகையை மாதம் தோரும் சரியாக கட்ட முடியவில்லை. நேற்று சரியாக காலை 11:00 மணி அளவில் ஈகுடாஸ் கம்பெனியில் பணி புரியும் ஆறு நபர்கள் நேரடியாக இந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து கடனை கட்டும்படி வற்புறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். தொடர்ந்து 3 மணி நேரம் இப் பெண்ணின் வீட்டின் முன்பாக அமர்ந்து கொண்டு பணம் கட்டினால் தான் நாங்கள் செல்வோம் என்று கட்டாயப்படுத்தி மன உளைச்சலை கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்திரா தன் மனவேதனையில் அரளி விதையை அரைத்து குடித்து இறந்துவிட்டார். இறந்த சந்திராவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..தனியார் பைனான்ஸ் கம்பெனிகள் மற்றும் தனியார் வங்கிகள் பணம் கட்ட முடியாத நபர்களை அவர்கள் ஆசை வார்த்தைகளை கூறி வீடுகளுக்கு கடன் தருகிறோம் , தனி நபர் வியாபாரக் கடன்கள் மற்றும் வங்கி கடன் அட்டை கள் என்று இவர்களின் வலையில் சிக்க வைத்து தவணை தாமதம் என்ற பெயரில் கூட்டு வட்டி போட்டு மக்களை தற்கொலைக்கு தூண்டும் நிலைக்கு இது போன்ற கும்பல்கள் செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இதே நிலை காணப்படுகிறது. எனவே நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் கடன்களை கொடுத்து ஏழை எளிய மக்களின் உயிரைப் பறிக்கும் இந்த நிதி நிறுவனங்கள் மற்றும் இது போன்ற நிறுவனங்களில் பணி புரியும் இந்த அடாவடி வசூல் செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.ஏற்கனவே ரிசர்வ் வங்கி இது போன்று அடாவடித்தனமாகவோ, கடன் வாங்கிய நபரை தகாத வார்த்தைகளால் திட்டக்கூடாது என்று தெரிவித்தும் கூட இதையெல்லாம் மீறி ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் செயல்படுகின்றனர் என்றால்??? இவர்களுக்கு பின்னணி யார்? ஆகவே இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இல்லையெனில் இந்த மாதிரியான தற்கொலை சம்பவம் நடந்து கொண்டேதான் இருக்கும்….. இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்…………………………….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close