fbpx
Others

தேனி– பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய …..செய்தி

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஆக.6- தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் தங்கவேல் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவானந்தன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார். இந்த கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், பாண்டியம்மாள் பாலு, சாந்தி பாண்டியன், தேவரலிங்கம்மாள் சேகர், பாக்கியம் கண்ணன், கீழ வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ், பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சம்சுல் குதா ரபீக் முகமது, டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ், எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பால்ராஜ், சருத்துப் பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி கண்ணையன், ஜெயமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் அங்கம்மாள் சப்பாணி, வடபுதுப்பட்டி ஊராட்சி செயலர் மணிகண்டன், மேல்மங்கலம் ஊராட்சி செயலர் நாகராஜ், ஜல்லிபட்டி ஊராட்சி செயலர் லெனின், கீழ வடகரை ஊராட்சி செயலர் ஜெயபாண்டியன், ஜெயமங்கலம் ஊராட்சி செயலர் கணபதி, பொம்மி நாயக்கன்பட்டி ஊராட்சி செயலர் செல்லப்பாண்டி, எண் டப்புளி ஊராட்சி செயலர் பிச்சைமணி, முதலக்கம்பட்டி ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன், எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி செயலர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close