fbpx
Others

தேனி பெரியகுளம் உலக சுற்றுச்சூழல் தின விழா

ஜூன்.4
தேனி மாவட்டம் பெரியகுளத்தில். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் உலக சுற்றுச் சூழல் தின விழாவை முன்னிட்டு மரம் நடும் விழா மற்றும் தோட்டக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளம் நிலை தோட்டக் கலை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி தோட்டக் கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றன. இப்பேரணியானது பெரியகுளம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற. இந்த விழிப்புணர்வு பேரணியை பெரியகுளம் அரசு மருத்துவமனை மருத்துவர் ஆசியா கொடி அசைத்து துவக்கி வைத்தார் இப்பேரணியில் பங்கு பெற்ற கல்லூரி மாணவ மாணவிகள் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்திய படி நகரின் முக்கி வீதிகளில் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோசங்கள் எழிப்பி ஊர்வலம் சென்றனர் இப்பேரணியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் பரிமளா செல்வி, நாட்டு நல பணித் திட்ட அலுவலர் குமரன், தோட்டக்கலை கல்லுரி பேராசிரியர் கீதா ராணி, தாவர உடற் செயலியல் பேராசிரியர் வெங்கடேசன், பெரியகுளம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், காவல் ஆய்வாளர் மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர் நன்றி உரை இரண்டாம் ஆண்டு இளம் நிலை தோட்டக்கலை மாணவி ஹ.ஜெயஸ்ரீ நன்றி உரையாற்றினார்.

Related Articles

Back to top button
Close
Close