fbpx
Others

தேனி- பாராளுமன்ற தொகுதி எம்.பி.சீட் யாருக்கு முட்டி மோதும் கட்சி நிர்வாகிகள்.?

இயற்கை எழில் கொஞ்சும் தேனி பாராளுமன்ற தொகுதியில் பெரியகுளம் ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், உசிலம்பட்டி ,சோழவந்தான் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளனதேனிபாராளுமன்றதொகுதியில்  பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமுதாயமக்கள்வசித்துவருகிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் இன சமூகத்தினரும்,அதற்கு அடுத்தபடியாக நாயக்கர் சமுதாயத்தினரும் , செட்டியார், பிள்ளைமார் நாடார் ,கவுண்டர், உட்பட முஸ்லிம் மக்களும் கிறிஸ்தவ மக்களும் தொகுதியில் பரவலாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக பாரதிய ஜனதா கட்சி ,காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் சீட்டுக்காக தங்கள் கட்சி தலைமையிடம் இப்பொழுது இருந்தே போராடி வருகிறார்கள். திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், கம்பம் செல்வேந்திரன் , முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையா , செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த போடி லட்சுமணனும், அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் முருக்கோடைராமர் , முன்னாள் எம்பி பார்த்திபன்,தேனி கிருஷ்ணகுமார் மற்றும் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த போடி குறிஞ்சிமணி மற்றும் தேனி நாராயணசாமி மற்றும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த கூடலூர் அருண்குமார் உள்ளிட்டோரும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் மாவட்ட துணை சேர்மன் ராஜபாண்டிஉட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் தற்போதே சீட்டுக்காக கட்சித் தலைமையிடம் சீட்கேட்டு காய் நகர்த்தி வருகிறார்கள். அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள். இவர் நின்றால் ஓபிஎஸ் முழு ஆதரவளிப்பார் எனவும் சொல்கின்றனர். சமீபத்தில் அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த முன்னாள் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் அதிமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்க உள்ளதாகவும் பரவலாக சொல்கின்றனர் .காங்கிரஸ் தரப்பில், தேனி எம்பி, ஆக இரண்டு முறை வெற்றி பெற்ற ஆருண் மீண்டும் தலைமையிடம் வாய்ப்பு கேட்டு முயற்சி செய்து வருகிறார் காங்கிரஸில் வேறு பலரும் சீட் கேட்டுமோதி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகிறது .1999 ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்ட திரைப்பட நடிகர் மன்சூர்அலிகானும் தற்போது இத்தொகுதியில் போட்டிடப்போவதாக அறிவித்துள்ளார் ..திமுக அதிமுக ,பா.ஜ.க.,நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுவதால் கூட்டணி அமைவதை பொறுத்து வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படும் என கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close