தேனி–தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி..

*வணிகர்களையும் வணிக சட்டங்களையும் பாதுகாக்க தென் மண்டலத்திற்கு ஒரு நியமன எம்.பி யை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி* . தேனி மாவட்டம் சின்னமனூரில் வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகியின் வணிக நிறுவன திறப்பு விழாவிற்கு இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புமாநிலதலைவர்விக்கிரமராஜாசிறப்புவிருந்தினராககலந்துகொண்டார்.விழா வில் கலந்துகொண்ட அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்மதுரை மாநகரில் பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது இந்த பாளையம் அமைக்கும் பணி காரணமாக பொதுமக்களும் வியாபார பெருமக்களும் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர் எனவே உடனடியாக விரைந்து இந்த பாலத்தின் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும்ஜிஎஸ்டி வரி விதிப்பு உழவர் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் போன்றவை சம்பந்தமாக டெல்லியில் தான் முகாமிட்டு பேச வேண்டிய சூழ்நிலை உள்ளது எனவே வணிகர்களையும் வணிக சட்டங்களையும் பாதுகாப்பதற்கும், வணிகர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்காகவும் தென் மண்டலத்திற்கு ஒரு நியமன எம் பி யை நியமிக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றும்,2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஆதரவு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு வணிகர்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சி நன்மை செய்கிறதோ அந்த கட்சிக்கு தங்களது ஆதரவு என தெரிவித்தார்.திண்டுக்கல் முதல் குமுளி வரை புதிய ரயில்வே வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்றும்ஆன்லைன் வர்த்தகம் மூலம் வியாபாரிகளுக்கு 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.மேலும் தனிநபர் வருமான வரியை 12 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அரசை வலியுறுத்தி கூறினார்…..