fbpx
Others

தேனி–சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் குமுறல்-

,அம்மா மண்டபம் கட்டுவதற்கு காட்டிய அக்கறையில் பாதிகூட விடுதலை போராட்ட தியாகிகள் மணிமண்டபம் கட்ட  அரசுஅக்கறை காட்டகூடாதா? சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் குமுறல்

தேனிமாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் சங்க பொதுக்குழு கூட்டமும்,இந்திய சுதந்திர தின 75 வது ஆண்டு பொன்விழா நிகழ்வும் கடந்த தேனி NRT திருமண மண்டபத்தில் நடந்தது.நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். நிகழ்வுக்கு டாக்டர் NRTR தியாகராஜன்,கோகலே,ஜெகநாத் மிஸ்ரா,இராஜேந்திரன்,முகைதீன் அப்துல் காதர்,புருசோத்தமன் முன்னிலை வகித்தனர்.சுமார் 50 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்”இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவூட்டும் விதத்திலான தியாகிகள் மணிமண்டபம் அலட்சியமின்றிஉடனே அமைக்க வலியுறுத்தியும்,நடந்துமுடிந்த சுதந்திரபோராட்ட தின பொன்விழா கொண்டாட்டத்தில் தியாகிகளின் வாரிசுகளை உரிய முறையில் கௌரவிக்காத தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்,தியாகிகள் வாழ்ந்த தெருக்களுக்கு அவர்களின் பெயரை வைக்க கோரியும்,கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் புகைப்பட வரிசைக்கு சங்க நிர்வாகிகள் மூலம் படங்களை பெற்று வைக்கப்பட வலியுறுத்தியும் உள்ளிட்ட சுமார் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் தலைமை உரையாற்றிய தலைவர் “கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பத்தில் நம்மை சந்தித்து நம் குறைகளைக்கேட்ட மாவட்டஆட்சியர் பின் அரசியல் தலையீடுகளால் நம்மை தவிர்த்தார்.அம்மா மண்டபம் கட்ட காட்டிய அவசரத்தையும்,முக்கியத்துவத்தையும் விடுதலைபோராட்ட வீரர்களுக்கான மணிமண்டபம் கட்டுவதில் காட்ட அரசு நிர்வாகம் மறுத்தது. இந்த ஆட்சியிலும் அதே நிலைதான் தொடர்கிறது அதனால்தான் சுதந்திர தின பொன் விழா நிகழ்வில் தியாகிகளும் அவர்கள் வாரிசுகளும் உரிய முறையில் கௌரவிக்கபடவில்லை நாம் பிச்சையா கேட்கிறோம்?,மரியாதையையும்,உரிய கௌரவத்தையும் தானே கேட்கிறோம். சீக்கிரம் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட அரசு நிர்வாகம் இடம் ஒதுக்கவில்லையெனில் சட்டரீதியாக,அறபோராட்டத்தை நடத்துவோம் ” என கூறினார். நிகழ்வின் முடிவில் மாவட்ட பொருளாளர் எம். ராஜா நன்றி கூறினார்

Related Articles

Back to top button
Close
Close