தேனி-கெஜ்ரிவாலை தாக்க முயற்சி செய்ததைக் கண்டித்து…..
தமிழ்நாடு – தேனி மாவட்டம் சின்னமனூரில் ஆம் ஆத்மியினர் கண்டன ஆர்ப்பாட்டம் !!! கெஜ்ரிவாலை தாக்க முயற்சி செய்ததைக் கண்டித்து 29/10/2024 இன்று சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களை தாக்க எத்தனித்த சமூக விரோதிகளின் ஜனநாயக விரோத செயல்களைக் கண்டித்து, தேனி மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி தலைமையில், கம்பம் இணைச்செயலாளர் வேல்பாண்டியன் முன்னிலையில் கண்டனம் தெரிவிக்கின்ற பதாகைகளை ஏந்தி ஆம் ஆத்மியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். டெல்லிக்கான காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்புதர தவறிய பிஜேபி ஒன்றிய அரசைக் கண்டித்தும், நீதி வேண்டும் என்றும் முழக்கமிட்ட நிகழ்ச்சி…….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், தேசிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி