fbpx
Others

தேனி–குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவிலில்நடப்பது என்ன.?

குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவிலில் பூஜை பொருட்கள் விற்பனை என்ற பெயரில் வழிப்பறி செய்வதாக பக்தர்கள் புலம்பல்..?

தேனி மாவட்டம் உலக பிரசித்திபெற்ற குச்சனூர் சுயம்பு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் பக்தர்களுக்கு மிகவும் மனவேதனை அளிக்கும் வகையில் , புரட்டாசி சனி மற்றும் முக்கிய தினங்களில் பகவானை தரிசிக்க வருகின்ற பக்தர்கள் பூஜைக்காக வாங்கும் பூஜை பொருட்கள் எள் தீபம் விலை ….ரூ 120, 100, 150 என அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்கிறார்கள், மேலும் சாமிக்கு படைக்கும் எண்ணை பூஜைத்துணிஅபிஷேக பொருட்கள், மறு சுழற்சி முறையில் பொருட்களைவிற்பனை செய்து பக்தர்களிடம் பணம் வசூலித்து வருகிறார்கள்   இச்செயலானது பக்தர்களை மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது, நிம்மதிக்காக கோயிலுக்கு வந்தால் இந்த மாதிரியான ஏமாற்றும் வேலைகள்நடைபெற்றுவருகிறது….இதற்குகோயிலில்உள்ளஅறநிலையத்துறை  அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கும் பங்கு உண்டு என்பதால் இதை கண்டும் காணததுபோல இருந்து வருகின்றனர். இவற்றை உடனடியாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா என இப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்……………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

 

Related Articles

Back to top button
Close
Close