fbpx
Others

தேனி– உத்தம பாளையம் தாலுகா கோம்பைஅருகே—புரட்டாசி பெருவிழா

தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுகா கோம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுயம்பு பெருமாள் திருக்கோவில் புரட்டாசி பெருவிழா முதல் சனிக்கிழமை திருவிழா துவங்கியது வெகு சிறப்பாக நடைபெற்ற திருவிழாவில் தேனி மாவட்டம் முழுவதிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பகத்தர்கள் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர் இந்த புரட்டாசி மாத பெருவிழா நேற்று 24 -09-2022 முதல் தொடங்கி புரட்டாசி மாதம் 22-10-2022 வரை ஐந்து சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும் என இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் கடந்த இரண்டு வருடமாக கொரோனாவால் தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் இத்திருவிழா துவங்கியதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்த்தர்கள் கோவிலுக்கு சென்று வர தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் அதிக அளவில் மக்கள் வருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு கருதியும் 100க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த புரட்டாசி மாத 5 சனிக்கிழமை திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் கம்பம் இந்து அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன..               

Related Articles

Back to top button
Close
Close